தண்டனையாக சிறுமியை வன்புணர்வு செய்யுமாறு உத்தரவிட்ட பஞ்சாயத்துத் தலைவர்


ஜார்கண்ட் மாநிலத்தின் பொகாரோவில் சாதிப்பஞ்சாயத்துத் தலைவரின் உத்தரவால் 13 வயதுச் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டுள்ளாள்.

பொகாரோ வாவட்டத்தில் கோமியா பகுதியில், கடந்த திங்களன்று இரவு ஹரேந்திரா என்பவன் நாகபந்திபாஸி என்பவரின் வீட்டுக்குள் புகுந்து, நாகபந்தியின் மனைவி உறங்கிக் கொண்டிருந்த போது வன்புணர்வு செய்ய முயன்றுள்ளான்.

இந்தச்சம்பவத்தை பாஸி சமூகத் தலைவரான கோஸல்பாஸியிடம் நாகபந்தியும் அவரது மனைவியும் செவ்வாயன்று புகாராக அளித்துள்ளனர். ஹரேந்திரா குற்றவாளி எனத் தீர்ப்பளித்த கோஸல்பாஸி, ஹரேந்திராவுக்குத் தண்டனையாக அவனது 13 வயதுத் தங்கையை வன்புணர்வு செய்யுமாறு நாகபந்திக்கு உத்தரவிட்டார். உடனே, ஹரேந்திராவின் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை இழுத்துச் சென்ற நாகபந்தி அவளை வன்புணர்வு செய்தார்.

கோஸல்பாஸியின் செல்வாக்குக்கு அஞ்சிய அச்சமூக மக்கள் யாரும் இக்கொடிய தண்டனைக்கு எதிராக முணுமுணுக்கவுமில்லை. ஆனால் சிறுமியின் பெற்றோர் கோமியா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவலர்கள் இரத்தம் ஒழுகிய நிலையில் இருந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கோஸல்பாஸி, நாகபந்தி, ஹரேந்திரா என மூவரும் கைது செய்யப்பட்டனர்.

நாகபந்தியின் மனைவி அளித்த புகாரின் படி ஒன்றும், சிறுமியின் வாக்குமூலப்படி ஒன்றும் என இச்சம்பவம் தொடர்பாக இரு வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்கணிப்பாளர் ஜிதேந்தர் சிங் கூறினார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"