ஆன் லைன் மூலம் சிறுமியுடன் பழகி பாலியல் பலாத்காரம் செய்து கொன்று தின்ற கொடூரம்


இங்கிலாந்து நாட்டின் கெண்ட பகுதியை சேர்ந்தவர் டேல் போலிங்கர் (வயது 57) அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வருகிறார்.இவர் திகிலூட்ட கூடிய சாட் இணையதளம் ஒன்றில் உறுப்பினராக உள்ளார்.

அதில் இவர் பதியும் கருத்துக்கள் மிகவும் திகிலூட்ட கூடியதாக இருக்கும். இவர் அந்த இணையதளத்தில் குழந்தைகளின் மாமிசம் மிகவும் மிருதுவாக இருக்கும் எனகூறி இருந்தார். இது குறித்து அமெரிக்க உளவு நிறுவனமான எப்.பி.ஐ இங்கிலாந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. இதை தொடர்ந்து இங்கிலாந்து போலீசார் அவரை கைது செய்து அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

அவரது வீட்டில் அதிகமான குழந்தைகள் படங்கள் இருந்தது கண்டு பிடிக்கபட்டது மேலும் கோடாரி ஒன்றுடன் அவர் கண்ணாடி முன் நின்று எடுத்து கொண்ட படத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

போலிங்கரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்து உள்ளன.கடந்த பிப்ரவரி மாதம் முதல் போலிங்கர் மருத்துவமனையில் பணியாற்றி உள்ளார்.ஆன் லைன் மூலம் தொடர்பு கொண்ட போலிங்கர் ஜெர்மனியை சேர்ந்த 14 வயது மாணவி ஈவா என்பவருடன் நட்பு கொண்டு உள்ளார் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ந்தேதி அவரை இங்கிலாந்தின் ஆஷ்போர்டு சர்வதேச ரெயில் நிலையத்திற்கு வரவழைத்து உள்ளார்.

அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்துஅவரை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.; பின்னர் அந்த சிறுமியை கொலை செய்து நரமாமிசம், தின்று உள்ளார். இத்தகவலை எப்.பி.ஐ உளவுபிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கோர்ட்டில் தெரிவித்து உள்ளார்.

இது போல் அரசு வவக்கீல் கோர்ட்டில் கூறும் போது இதுபோல் ஆன்லைன் மூலம் நட்பு ஏற்படுத்தி கொண்டு 39 வயது பெண் ஒருவரையும் அவரது 5 வயது மகளையும் கொலை செய்து இவர் அவர்களது நர மாமிசத்தை தின்று உள்ளதாக கோர்ட்டில் குறி உள்ளார். இவர் மீதான வழக்கு கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"