ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் தோழியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட மாணவி


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ராணி (20). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வி (20)(இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளன). பள்ளியில் படிக்கும் போதே இணைபிரியா தோழிகளாக இருந்த இருவரும், ஒரே பொறியியல் கல்லூரியில் சேர்ந்தனர்.

இந்நிலையில், ராணிக்கும் செல்விக்கும் ஓரின சேர்க்கை உறவு ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், ராணியின் நடவடிக்கையில் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தீவிரமாக கண்காணித்ததில் செல்வியுடனான அவரது தவறான பழக்கம் தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களது மகளை கண்டித்தனர். ராணியை வேறு கல்லூரிக்கு மாற்றியதுடன், அங்குள்ள விடுதியில் தங்க வைத்தனர்.

இருப்பினும் ராணி, செல்வி இடையே தவறான பழக்கம் நீடித்து வந்துள்ளது. இதையடுத்து ராணியை விடுதியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்த பெற்றோர், மகளிடம் பக்குவமாக பேசி அவரது மனதை மாற்றினர்.

பெற்றோரின் அறிவுரைப்படி செல்வியை சந்திப்பதை தவிர்த்தார் ராணி. ஆனால் செல்வியோ, ராணியின் வீட்டுக்கே சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். போலீசில் புகார் செய்தால் அசிங்கம் என்பதால் வேறு வழியின்றி ராணியின் பெற்றோர் சகித்து கொண்டிருந்தனர்.

பெற்றோர் பேச்சை கேட்டுக் கொண்டு தன்னை ஒதுக்கிய ராணியை பழிவாங்க நினைத்தார் செல்வி. ராணியுடன் தான் இருக்கும் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக் மற்றும் சில இணையதளத்தில் செல்வி வெளியிட்டுள்ளார்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த ராணி, அவரது பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் செய்தனர். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து தனது படங்களை இணையதளத்தில் வெளியிட்ட செல்வியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் ராணி வழக்கு தொடர்ந்துள்ளார். ஓரினசேர்க்கைக்கு மறுத்த தோழியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் மாணவி வெளியிட்ட சம்பவம் குமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"