பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கிய கிறிஸ் கெய்ல்


ஒரு பெண் நிருபர், ‘பிட்ச்’ எப்படி உள்ளது என கருதுகிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்ப, அதற்கு சம்பந்தமில்லாமல் சிரித்தவாறே பெண் நிருபரை கிண்டலடித்துப் பதில் சொன்ன கெய்ல், இதுவரையில் தொடவே இல்லை.
எனவே எப்படி இருந்தது என்று சொல்ல முடியாது என்று இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியுள்ளார்.

அதோடு அந்த பெண் நிருபரிடம், உன் சிரிப்பு அழகாக இருக்கிறது. அது எனக்குப் பிடித்திருக்கிறது என்றும் கெயில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கெய்லின் கிண்டலை சம்பந்தப்பட்ட பெண் நிருபர் எப்படி எடுத்துக்கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால் கெய்லின் இந்தப் பேச்சு பெண்கள் அமைப்பினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற, பெண்களுக்கு எதிராக வரம்பு மீறிய தன்னுடைய கருத்துக்காக கிறிஸ் கெயில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கரீபியன் பிரிமியர் லீக் நிர்வாகிகள் கூறுகையில்,

போட்டிகள் தொடர்பான நெருக்கடியில் இருந்த கிறிஸ் கெய்ல், பேட்டியின்போது செய்தியாளர்களிடம் உற்சாகமாக பேசி சிரித்துக்கொண்டிருந்தார்.

நகைச்சுவைக்காக அவர் சாதாரணமாக கூறிய வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. மற்றபடி அவரது பேச்சுக்கு எந்தவிதமான தவறான உள்நோக்கமும் கிடையாது என்று சமாளித்துள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"