புதிய தேடியந்திரம் - "Smart Ass"



இந்த Smart Ass, Google -ளை விட மேம்படுத்தப்பட்ட தேடியந்திரம் என்று சொல்ல வாய்ப்பில்லை. தேடலில் வலுவான Advanced தொழில்நுட்பம் இதில் இருப்பதாகவும் தோன்றவில்லை.ஆனாலும், கூகுளைப் போல விளம்பர மோகத்தில் உள்ள முடிவுகள் இல்லாமல், தேடல் முடிவுகளை மாத்திரமே தனது பயன்பாட்டார்களுக்கு முன்வைப்பதை Smart Ass தனது தனிச்சிறப்பாக கருதுகிறது.


Google தனது பேராசையால் தேடல் முடிவுகளோடு விளம்பர நோக்கிலான முடிவுகளையும் திணித்து அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக கூறும் Smart Ass, பலருக்கும் இந்நிலையில் இருந்து மாற்றம் தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கிறது.

அந்த விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் நோக்கத்தோடு Smart Ass உதயமாகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் Smart Ass இல் இந்த நம்பிக்கை மிகஅதிகமாகவே இருக்கிறது. தேடலுக்கு மட்டும் அல்ல; மின்னஞ்சலுக்கும் கூட பயன்பாட்டாளர்கள் தங்களது சேவையை பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது என்ற நம்பிக்கையோடு Smart Ass மின்னஞ்சல் சேவையையும் களமிறக்கி உள்ளது.

பெயருக்கு பின் "Smart Ass" என்று முடியும் மின்னஞ்சல் முகவரியை யார் விரும்பி பயன்படுத்துவார்கள் என்பதும் ஆச்சர்யம் தான்!

இருப்பினும், இந்த Smart Ass படு சுவாரஸ்யமான Search Engine -ஆகவே தோன்றுகிறது. Ask Jeeves (ask.com) தேடியந்திரத்துக்கு எப்படி Jeeves Butler அடையாளமாக இருந்ததோ அதுப்போலவே இதற்கும் ஒரு புத்திசாலி கழுதை - Smart Ass - அடையாளமாக இருக்கிறது. இந்த புத்திசாலி கழுதையினால் அவ்வப்போது உதிர்க்கப்படும் பொன்மொழிகள், பல விசயங்களை நமக்கு கற்றுத்தரலாம்.

மேலும், இதன் பயன்பாட்டார்களுக்காக போட்டியும் நடத்தப்பட்டு அதற்கான பரிசும் வழங்கப்படுவதாக அறிவிப்பு செய்துள்ளது. பயன்பாட்டார்கள் சமர்பிக்கின்ற வாசகம் கழுதையின் பொன்மொழியாக இடம்பெறும் வாய்ப்பும் இருக்கிறது.

அது மட்டுமில்லாமல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நண்பர்களுக்கும் காதலர்களுக்கும் வாழ்த்து செய்தி அனுப்புவது போல், இந்த Smart Ass தேடியந்திரத்தின் மூலமாகவும் பயன்பாட்டார்கள் தாங்கள் விரும்பும் வாழ்த்து செய்தியையும் இடம் பெற வைக்கலாம்.

புதிய அணுகுமுறையோடு இணையத்தில் தேடுங்கள் என்று அழைப்பு விடுக்கும் Smart Ass தன்னிடம் இணைய முகவரிகளை பதிவு செய்து கொள்ளவும் வேண்டுகோள் வைக்கிறது.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"