மாணவர்களிடம் கன்னித்தன்மை பரிசோதனை


தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ள வடக்கு குவோசுலு நட்டால் எனும் பரதேசத்தில் சில பாடசாலைகளில் மாணவர் மாணவிகளிடையே கன்னித்தன்மை பாpசோதனை நடத்தப்பட்டிருக்கின்றன. நகர்ப்புறம் சார்ந்த பாடசைகளில் ஏறத்தாழ 3000 மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின் பின் கன்னித்தன்மையுடையவர்களென கல்வித் திணைக்களம் சான்றிதழ் கூட அளித்துள்ளது. ஆசிரியர்களாலேயே நடத்தப்படும் இந்தப் பரிசோதனைக்கு பெற்றோர்களின் பூரண ஆதரவு இருந்திருக்கிறது. அத்துடன் இந்த பரிசோதனை 6 வயதடையவர்களிடம் கூட நடத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த சான்றிதழ் புதுப்பிக்கப்படுவதற்காக மீண்டும், மிண்டும் இந்த சோதனை நடத்தப்படுவதாக தென்னாப்பிரிக்காவில் வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது.

மாணவர்கள் சிறுநீர்கழிப்பதை அவதானித்தும், அவர்களின் முழங்காலுக்குப்பின்புறம் மற்றும் ஏனைய சில இடங்களில் தோல்களும் பரிசோதிக்கப்படுகின்றன.பெண்களுக்கு பெண் ஆசிரியைகளாயே பரிசோதக்கப்படுவதோடு அவர்கள் கன்னிச்சவ்வையும் பரிசோதிக்கிறார்கள். இதற்கு ஆசிரியர்கள் தரும் விளக்கம் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்படும் சோதனையென்றே. சூலு இனத்தவர்களின் மரபில் திருமணத்திற்கு முன் பாலுறவு மரபை மீறும் குற்றமாகும்.

இந்தப் பரிசோதனைக்கு எவரும் வற்புறுத்தப்படாததாகக் கூறப்பட்டபோதும், கல்வித் திணைக்களம் இந்தப் பரிசோதைனையை மேற்கொள்பவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கிறது. கொம்பின்பிண்டோ எனும் பள்ளிக்சுடத்தில் 747 மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 500 பேர் சித்தியடைந்திரக்கிறார்களாம். கொப்பும்லொண்டோ எனும் பள்ளிக்கூடத்தில் 840 போpடம் நடத்தப்பட்ட சோதனையில் 250 பேர் தான் சித்தியடைந்திருக்கிறார்களாம்.

”நான் பரிசோதித்த 3000 மாணவர்களில் 135பேர் சித்தியடைந்திருக்கிறார்கள்” என மாலிங்கா எனும் பாசாலை அதிபர் குறிப்பிடுகிறார்.பிலிசீவி எனும் ஆசிரியை குறிபிடுகையில் தான் மாணவர்கள் மத்தியில் அசெம்பிளியில் உரையாற்றும் போது தான் கனனித்தன்மையுடைவள் என்பதை பெருமிதத்துடன் குறிப்பிடுவதாகவும், எனக்கு வழங்கப்பட்டுள்ள கன்னித்தன்மை சான்றிதழை நான் சகலருக்கும் பெருமிதத்துடன் காண்பிப்பதாகவும், தனது கனவனுக்கான தனத அன்பளிப்பாக அந்த சான்றிதழை தான் அளிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

14 வயதுடைய தமிலூலி மாணவி குறிப்பிடுகையில் ”நான் இரண்டு சான்றிதழ்களை வைத்திருப்பதையிட்டு பெருமைகொள்கிறேன். எனது வகுப்பிலுள்ள 28 மாணவர்களில் 20 பேர் தூய்மையானவர்கள்”

20 வயதுடைய நெலிசிலி எனும் உயர் கல்வி மாணவி குறிப்பிடுகையில் 15 பேருள்ள தனத வகுப்பில் தானும் தனது நன்பியும் தான் தூய்மையானவர்களென்றும், தனக்கு அளிக்கப்பட்டுள்ள சான்றிதழை தனது படுக்கையறைச் சுவரில் மாட்டி வைத்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார். ஆசிரியர்கள் தங்களது கடமையை நன்றாகச் செய்கிறார்கள் என்றும் அவர்கள் தனக்கு விருப்பமானவர்கள் என்றும் அந்த மாணவி மேலும் தெரிவிக்கிறார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"