“தேவுடியா மவன்” என்கின்ற மிக அசிங்கமான சொல் எங்கிருந்து வந்தது??


தேவரடியார்கள் இவ்வார்த்தையின் பொருள் என்ன என்பதனை பார்த்தால், தேவர்களுக்கு அதாவது கடவுளுடைய அடியார்கள், கடவுளுக்கு சேவை செய்ய தலைப்பட்டவர்கள். ஆண்கள் எப்படி துறவு மேற்கொள்ளுகிறார்களோ அதே போல் பண்டைய தமிழகத்தில் பெண்களுக்கும் சுதந்திரம் இருந்தது. அவர்களும் தங்களின் மனத்துக்கு விரும்பிய கடவுளுக்கே தங்களின் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் தாங்களாகவே முன்வந்து, கோயிலில் சேவை செய்துவந்தார்கள். தேவரடியார்களுக்கு, வேண்டிய அளவுக்கு பொருளும் நிலமும், வீடும் மன்னர்களால் அளிக்கப்பட்டது. பண்டைய தமிழகத்தில் இவர்கள் மிக மிக உயர்ந்த இடத்தில வைத்து மரியாதை செலுத்தினார்கள் அக்கால மன்னர்கள். மன்னன், அந்தணனுக்கு அடுத்து இவர்கள் தான் மிகவும் மதிக்கபட்டார்கள். பல்லக்கில் ஏறி போகும் உரிமையும் இவர்களுக்கு இருந்தது. பலர் கோயில்கள் கட்டியும், கோயில்களுக்கு தானம் அளித்தும் சேவை செய்துள்ளார்கள்.

தேவரடியார்களில் பலர் திருமணமும் செய்துகொண்டார்கள். அப்படி பார்க்கும் பொழுது, திருநாவுக்கரசரின் மனைவி தேவரடியார் தான். பல மன்னர்களின் அரசிகளாகவும் தேவரடியார்கள் இருந்துள்ளார்கள். இவர்களை மாணிக்கம் எனவும் அழைத்துள்ளார்கள். கோயில்களில் சுவாமிக்கு தீபாராதனை சேவை செய்யும் உரிமை இவர்களுக்கு இருந்தது. இவர்கள் தீபாராதனை காட்ட மற்றவர்கள், இவர்களுக்கு பின் நின்று தொழவேண்டும் என்கின்ற பழக்கமும் இருந்துள்ளது. இதில் முக்கியமாக பார்க்கவேண்டியது என்னவென்றால் யாரும் பெண்களை தேவரடியாராக மாறசொல்லி வற்புறுத்தவில்லை. இது அவர்களாகவே சுயமாக எடுத்த முடிவாகத்தான் இருந்திருக்கின்றது.

இதெல்லாம் பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தய காலம். பிற்கால சோழர் ஆட்சி நடந்த 11 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் ஆட்டமே ஆரம்பம். கி பி 11 ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு புது பழக்கம் ஆரம்பமானது. அதாவது கோயில் என்று இருந்தா அதில் கண்டிப்பாக தேவரடியார்கள் இருக்க வேண்டும் என்கற பழக்கம் தான். எல்லோருமா ஆன்மீகத்தை தேடி போவார்கள்? லட்சத்தில் ஒன்று, கோடியில் ஒன்றுதான் அவ்வாறு அமையும். அதனால்தானே அவங்களுக்கு மாணிக்கம் என்னும் பெயர் வந்தது???அதாவது கடவுளின் பெயரை சொல்லி, யார் ரொம்ப சமூகத்தில் ரொம்ப நலிவான நிலமையில் இருக்கிறார்களோ அந்த பொண்ணுகல் சாமிக்கு நேர்ந்து விடப்படவேண்டும். அப்படி செய்வதற்கு பெயர் தான் பொட்டு கட்டுதல். இப்படி பொட்டு கட்டி கோயிலுக்கு நேர்ந்து விட்டால் இவர்கள் கோயில் சொத்தாகிவிடுவார்கள்.

சாமிக்கு நெய்வேத்தியம் பண்ணினா சாமியா சாப்பிடுறாரு? நாமதானே சாப்பிடுறோம்? அதே மாதிரி, இவங்களும் பொது சொத்து என்பதனால், எல்லோருடைய பயன்பாட்டுக்கும் உடன் படவேண்டிய நிலைமைக்கு ஆளானார்கள். ரொம்ப கொடுமையான விஷயம் என்னன்னா, தேவரடியார்களுடன் உடல் ரீதியா தொடர்ப்பு வைப்பது ஒன்றும் தவறான விஷயம் இல்லைங்கிற அளவிற்கு அந்தகாலத்தில் ஆக்கிவிட்டார்கள்.???
கழுத தேஞ்சு கட்டெறும்பான போன கதையாக போய்விட்டது தேவரடியார்களின் நிலைமை. மாணிக்கம் மாதிரி இருந்தவங்கள, மனுஷியா கூட மதிக்காம சொந்த தேவைக்காக பயன்படுத்தப்பட்டனர். கோயிலுக்கு விளக்கு, மாடு போன்றவற்றை தானம் கொடுக்கும்போது பெருமையாக வெளியே சொல்லிக்கொள்வதைப்போல, விளக்கு கொடுத்தோம், மாடு கொடுத்தோம், தேவரடியாரை கொடுத்தோம் என்கின்ற அளவிற்கு சமூகத்தில் அவர்களின் நிலைமை மிக கீழே தள்ளப்பட்டது.

எந்த வயசில் பெண்களை பொட்டு கட்டினாங்க? 8 லிருந்து 10 வயதிற்குள் வயதுக்கு வராத சின்னஞ்சிறு குழந்தைகள் முதற்கொண்டு, இளம் விதவைகள் வரை ரகவாரியா பொட்டு கட்டினார்கள். அதுமட்டும் இல்லை, அப்பவே உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, ஏழை பணக்காரன் போன்ற எல்லா கறுமமும் இருந்தது. இப்போ ஒரு பணக்காரர் சாமியிடம் வேண்டிக்கொள்கின்றார், எனக்கு இருக்கின்ற பிரச்சினை சரியானால், உனக்கு தேவரடியார்களை காணிக்கையாக கொடுக்கின்றேன் என்று கடவுளிடம் டீல் பேசுகின்றார். நல்லது நடந்தால், இவர் என்ன இவருடைய குடும்பதிலிருந்தா பொண்ணுங்களை பொட்டுகட்டுவாறு??? இல்லை எங்கையாவது அடிமாட்டு விலைக்கு சிக்கும் அப்ப வாங்கி கோவிலுக்கு பொட்டு கட்டிவிடுறதுதானே!!!நிச்சயமா கிடையாது.

பணத்த வீசி எறிஞ்சா பொண்ணுங்க கிடைக்கபோறாங்க. ஆமாம் அந்தகாலத்தில்(ஏன் இந்த காலத்தில் கூட) கிடைச்சாங்க. இந்த கோயிலுக்கு பொட்டு கட்டி விடுவதற்காகவே விலைக்கு பொண்ணுங்க கிடைத்தார்கள். அப்படி சிக்கினது எல்லாம் ஏழைகள்தான். வேற என்ன வழி அவங்களுக்கு. இந்த மாதிரி விஷயத்துல சண்டையெல்லாம் ஆகி ராஜாகிட்டே கேஸ் எல்லாம் போயிருக்கு. அப்படி பொட்டு கட்டி விட்ட பொண்ண வேற ஜாதிக்காரங்க கொலை கூட செய்து இருக்கின்றார்கள். இப்படி கோயிலுக்கு நேர்ந்து விடப்படும் பெண்பிள்ளைகள் எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறது? ஏதாவது சின்னம் வேணும் இல்ல? அதனால பொட்டு கட்டி விடப்படும் பெண்ணின் மார்பகத்திலும், காலிலும் திரிசூலம் சின்னமும், இன்னும் சில கோயில்களில் அவர்களின் கோயில் சின்னத்தையும் பச்சை குத்தினாங்க??மொத்தத்தில் இவர்கள் ஒரு அடிமைகள்.

ஊருக்கே, ஊரில் தலையாரி முதற்கொண்டு தயிர் விக்கிறவன் வரைக்கும் எல்லோருக்கும் சொந்தம். அப்படி தப்பி தவறி இவங்க ஊர்க்காரங்க சொல்லுவதை கேட்கவில்லை என்றால் மிக கொடூரமான தண்டனையெல்லாம் கொடுத்திருக்காங்க. சும்மா சொல்ல கூடியது போல இருக்கின்ற ஒரு தண்டனையை சொல்லுறேன் கேளுங்கோவன் – கை இரண்டையும் காலுடன் சேர்த்து கட்டி நிக்க வைத்துவிடுவார்கள். குனிந்து தான் நிக்க முடியும். அப்போ முதுகில் பெரிய கல்ல தூக்கி வெச்சுடுவாங்க.

இவங்களோட சைடு வேலை என்னனா, கோயில் கூட்டுவது, சாமிக்கு பூஜை செய்வது, திருவிழா காலத்தில், பாட்டு படிப்பது, மாலை கட்டிக்கொடுப்பது, நாட்டியம் ஆடுவது. இது சைடு மட்டும்தான். மெயின் வேல பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை(அது எல்லாம் சொல்லும் படியாவ இருக்கு...). அப்போ கர்ப்பத்தடை மாத்திரைகளோ அது தொடர்பான விடயங்களோ ஏதும் இல்ல இல்லையா? இப்படி தவறான உறவுகளாள், நிறைய தேவரடியார்கள் குழந்தை பெத்திருக்கின்றார்கள். இப்படி பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் அப்பா பெயர் எது என்று தெரியாது? இப்போ புரியுதா “தேவுடியா மவன்” என்கின்ற மிக அசிங்கமான சொல் எங்கிருந்து வந்தது என்று???

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"