இளம் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சாமியார் தலைமறைவு


இளம் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் பிரகாஷ் ஆனந்த், தலைமறைவாகி விட்டார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் ஆஸ்ரமம் நடத்தி வந்தவர் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி(வயது 83).

இவர் ஆஸ்ரமத்தில் பக்தர்கள் சிலர், தங்களது குடும்பங்களுடன் தங்கியிருந்தனர்.

இந்த குடும்பத்தை சேர்ந்த இரண்டு இளம் பெண்களை தனியாக அழைத்து முத்தமிட்டு, கட்டி தழுவியதாகவும் இவர் மீது புகார் எழுந்தது.

இதனையடுத்து டெக்சாஸ் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில் கணிசமான ஜாமின் தொகை கட்டி வெளியே வந்த சாமியார், தலைமறைவாகி விட்டார்.

இவரை சீடர்கள் தங்கியுள்ள பென்சில்வேனியா, டெக்சாஸ், கலிபோர்னியா, புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் பொலிசார் தேடி பார்த்து விட்டனர்.

இதற்கிடையே இவர் மெக்சிகோ வழியாக, இந்தியாவுக்கு தப்பி சென்று விட்டதாக அமெரிக்க பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கு பிரகாஷ் ஆனந்தின் சீடர்கள் தான் காரணம் என கூறிய பொலிசார், இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"