இணையதளத்தின் லிங்க் அனைத்தும் வேலை செய்கிறதா என்பதை சரி பார்க்க..??


இணையதள வடிவமைப்பாளர்கள் முதல் இணையதளம் வைத்து இருப்பவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் பொதுவான சந்தேகம் நம் இணையதளத்தின் எல்லா பக்கங்களும் வேலை செய்கிறதா என்ற கேள்வி இருக்கும். முழு இணையதளத்தை உருவாக்குபவருக்கு அதில் ஒவ்வொரு பக்கமாக சென்று எல்லா இணைப்பும் சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க நேரம் கிடைப்பதில்லை இந்த சிறிய வேலைக்கு உதவ ஒரு இணையதளம் உள்ளது.


இந்ததளத்திற்கு சென்று படத்தில் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் நம் இணையதள முகவரியை கொடுக்க வேண்டும். அடுத்து நமக்கு தேவையான ஆப்சன்-ஐ தேர்ந்தெடுத்து விட்டு Check என்ற பொத்தானை அழுத்த வேண்டும். ஒரு சில நிமிடங்களில் நாம் கொடுத்திருக்கும் இணையதளத்தின் அத்தனை லிங்க் (Link)-ம் வேலை செய்கிறதா அல்லது எத்தனை லிங்க் சரியாக இல்லை என்று அடுத்தப் பக்கத்தில் அதன் முகவரியுடன் காட்டும்.

இணையதள முகவரி கீழே

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"