உடலுறவின் உச்சக்கட்டம் மூலம் கிடைக்கும் நன்மைகள்


உறவின் உச்சக்கட்டம் என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு உணர்வு. தாம்பத்ய சுகத்தின் இந்த கிளைமேக்ஸ் மூலம் உடலின் ரத்த ஒட்டம் சீராகிறதாம். இதயம் தொடர்பான நோய்கள் குணமடைவதோடு உற்சாகம் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ஆர்கஸம் மூலம் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

செக்ஸ் உறவின் உச்சக்கட்டத்தில் வெடித்துக் கிளம்பும் உணர்வுகளினால் பெண்களின் உடலில் ரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறதாம். பிறப்பு உறுப்புகளில் மட்டுமல்லாது சருமத்தின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீராவதோடு ஆரோக்கியான சருமத்தை ஏற்படுத்துகிறது என்கின்றார் ஜெனிபர் பெர்மன் என்ற பாலியல் நிபுணர்.

உச்சக்கட்ட உணர்வில் இதயத்துடிப்பு அதிகரிக்கும். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் வேகமாக பாயும். அப்பொழுது சுரக்கும் ஹார்மோன் இதயம் தொடர்பான நோய்களை போக்கும் என்கிறார் பெர்மன். உடற்பயிற்சியின் மூலம் ஏற்படும் நன்மைகளை விட ஆர்கஸம் மூலம் இதயத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்கிறார் இந்த பாலியல் நிபுணர்.

ஆர்கஸத்தின் போது எண்டோர்பின், டோபமைன், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. இது உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தும் இந்த ஹார்மோன்கள் கோகெயின் எனப்படும் போதை மருந்துக்கு ஒப்பானது என்றும் அதை உட்கொள்வதால் ஏற்படும் பறத்தல் போன்ற உணர்வு ஆர்கஸம் மூலம் ஏற்படும் என்கின்றனர் அனுபவசாலிகள்.

இறை அனுபவ நிலை என்பது தியானத்தில் ஈடுபட்டவர்களுக்குத்தான் தெரியும். அது போன்ற ஒரு நிலை உச்சக்கட்டத்தினால் வருமாம். இதனால் உடலும் உள்ளமும் அமைதியடைந்து உறக்கம் எளிதாக வரும் என்கின்றனர் நிபுணர்கள். தூக்க குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த 1,800 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறவில் ஈடுபட்ட பின் நிம்மதியாக உறங்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.

தாம்பத்ய உறவில் ஈடுபடும் பெண்களை விட உறவில் ஈடுபடாத பெண்களில் புத்திக்கூர்மையில் சில சிக்கல்கள் இருந்ததாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் Logan Levkoff, Ph.D தெரிவித்துள்ளார். ஆர்கஸம் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகப்பதோடு, அவர்களின் முடிவெடுக்கும் திறன், புத்திக்கூர்மை போன்றவைகளை அதிகரிக்கிறது என்கின்றார் இந்த பாலியல் நிபுணர்.

ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் விரைவாக பாய்வதால் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது இது நிரூபிக்கப்பட்டது. ஆர்கஸத்திற்குப் பின்னர் மூளை சுறுசுறுப்பாக செயல்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல்வலியோ மன வலியோ இரண்டையும் போக்கும் இயற்கை வலி நிவாரணி செக்ஸ். ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் வேகமாக பாயும் பொழுது உடலில் ஆங்காங்கே ரத்தம் தேங்கியிருந்தாலும் அவற்றை உடைத்துக் கொண்டு நன்மை செய்கிறதாம். சோர்வு, மன அழுத்தம் போன்றவைகள் ஏற்பட்டிருந்தாலும், தலைவலி இருந்தாலும் அவற்றை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது ஆர்கஸத்தின் போது சுரக்கும் ஹார்மோன்கள் என்கிறார் பெர்மன்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"