உலகிலேயே சின்ன இடை என்ற பெருமையை பெற்றுள்ள இளம் பெண்!


இங்கிலாந்திலேயே மிகவும் சின்ன இடை என்ற பெருமையை 22 வயதேயான நெரினா ஆர்டன் என்ற இளம் பெண் பெற்றுள்ளார். இவர்தான் இங்கிலாந்திலேயே மிகவும் குறுகிய இடையைக் கொண்ட பெண்ணாம். இந்த அளவை அவர் கார்செட் எனப்படும் விசேஷ உடையை அணிந்து அதன் மூலம் சாதித்துள்ளாராம்.

இவர் ஒரு மாணவி. இவரது இடையின் அளவு 15.7 இன்ச் ஆகும். அதாவது 39.9 சென்டி மீட்டராகும். இந்த அளவு போதாது என்றும் இன்னும் சுருங்கச் செய்து, 14 இன்ச் என்ற அளவுக்கு தனது இடையைச் சுருங்க வைக்கப் போவதாகவும் துடிப்புடன் கூறுகிறார் நெரினா. தொடர்ந்து கார்செட்டை அணிந்து அணிந்து இப்படி குறுகிய இடையைப் பெற்றுள்ளாராம் நெரினா.

5 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட நெரினா, உலக சாதனையையும் நெருங்கி வருகிறார். தற்போது உலக சாதனை படைத்த கின்னஸ் இடைக்குச் சொந்தக்காரராக அமெரிக்காவின் கேத்தி ஜங் உள்ளார். அவரது இடை அளவு 15 இன்ச்சுகளே ஆகும்.

இதுகுறித்து நெரினா கூறுகையில், ரோட்டில் போகும்போது என்னோட இடையை எல்லோருமே குறுகுறுவென்று பார்ப்பார்கள். இருந்தாலும் அதை நான் கண்டு கொள்ள மாட்டேன், பெருமையாக நினைத்துக் கொள்வேன் என்றார். கார்செட் அணியாமல் நிர்வாண நிலையில் நெரினாவின் இடுப்பளவு 22 இன்ச் என்பது குறிப்பிடத்தக்கது.

நெரினா ஒரு நல்ல டான்ஸரும் கூட. நிறைய டான்ஸ் ஆடுவாராம். 14 வயது முதல் இவர் கார்செட் போட ஆரம்பித்தாராம். தற்போது இவரிடம் 78 கார்செட் உடைகள் உள்ளதாம். ஒரு நாளைக்கு 23 மணி நேரம் இந்த கார்செட் உடையில்தான் இருப்பாராம் நெரினா. குளிக்கும்போது மட்டும்தான் கழற்றி போடுவாராம்.

இவர் சாப்பாட்டில் எந்தக் குறையும் வைப்பதில்லை. ஒரு நாளைக்கு 6 முறை சாப்பிடுகிறார். இருந்தாலும் எடை கூடாத வகையிலான உணவு வகைகளை சாப்பிடுவாராம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"