இறந்த பெண்ணொருவரின் உடலை சமைத்து உண்ட சகோதரர்கள் (வீடியோ இணைப்பு)


இறந்த பெண்ணொருவரின் உடலை சமைத்து உண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.முஹமட் ஹாரிப் (47), பர்மாஹான் அலி (37) என்ற இச் சகோதரர்கள் இருவரும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.அப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சஹிரா பர்வீன(24) என்ற பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவரின் சடலத்தை தோண்டி எடுத்த இவர்கள் கால்களை வெட்டி கறி சமைத்து உண்டுள்ளனர். அப்பெண்ணின் கல்லறைக்கு சென்றிருந்த உறவினர்கள் சடலம் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பொலிஸார் நடத்திய தேடலின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அப்பிரதேச வாசிகள் கருத்து தெரிவிக்கையில், பல வருடங்களாக நரமாமிசம் மற்றும் நாய்களை இவர்கள் உண்டு வருவதாக தாம் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களின் மனைவியர் இவர்களை விட்டுச் சென்றுவிட்டதால் ஏற்பட்ட மன விரக்தியாலேயே இவர்கள் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"