கற்பழிக்க முயன்ற வாலிபரின் நாக்கை கடித்துத் துப்பிய இளம்பெண்


உத்தர பிரதேசத்தில் வீடு புகுந்து தன்னை கற்பழிக்க முயன்ற வாலிபரின் நாக்கை இளம்பெண் ஒருவர் கடித்துத் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் இதாவா மாவட்டத்தில் உள்ளது பர்ரா சலீம்பூர் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கைலாஷ் பஹேலியா(25) என்ற வாலிபர் அத்துமீறி அந்த இளம்பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தார். வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணை கைலாஷ் கற்பழிக்க முயன்றார்.

அப்பெண் எவ்வளவு போராடியும் அவரால் கைலாஷை தடுக்க முடியவில்லை. இதையடுத்து தனது கற்பை காப்பாற்றிக்கொள்ள அப்பெண் கைலாஷின் நாக்கை கடித்துத் துப்பினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"