போலிஸாரின் துணையுடன் நடுரோட்டில் பிரசவம்


ஒண்டோரியோவில் உள்ள West of Kingston என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது,ஒரு கர்ப்பிணிப் பெண், ரோட்டோரத்தில் குழந்தை பெற்றுக்கொண்டிருந்ததை பார்த்து,அவருக்கு உதவி செய்தனர்.

Stirling-Rawdon Township என்ற இடத்தில் இருந்து பிரசவத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு வழியிலேயே பிரசவ வலி வந்து விட்டதால், ஓட்டுனருக்கு என்ன செய்வது என்று தெரியாமல், ரோட்டோரம் காரை Belleville என்ற இடத்தில் நிறுத்தினார்.

அப்போது ரோந்து பணிக்கு வந்த காவல்துறை அதிகாரியின் துணையோடு, அந்த கர்ப்பிணிப் பெண், அழகான ஆண் குழந்தையை சாலையின் ஓரத்திலேயே பெற்றெடுத்தார். அதன்பின் தாயும், குழந்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"