தந்தையின் கண் முன்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு


வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த காவேரி பாக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்க சாவடி உள்ளது. காவேரிபாக்கம் முதல் வாலாஜா வரை தங்க நாற்கர சாலை பராமரிப்புக்காக தனியார் நிறுவனம் ஒன்று ஒரு வாகனத்தில் மூன்று பேரை அமர்த்து பராமரிப்பு பணியை செய்து வருகிறது.

இந்த நிலையில் 15.11.2012 அன்று இரவு 7.30 மணி அளவில் வாலாஜாவில் இருந்து சுமைதாங்கி கிராமத்தை நோக்கி பைக்கில் தனது மகளோடு சென்றுகொண்டிருந்த பாஸ்கரை வழிமறித்த நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்கள் மூன்று பேர், பாஸ்கரிடம் பைக்குக்கு லைசன்ஸ், இன்ஸ்சூரன்ஸ் போன்றவை இருக்கிறதா என கேட்டுள்ளனர். இல்லை என்றதும் பாஸ்கரை அடித்து உதைத்துள்ளனர்.

பாஸ்கர் கண் முன்பாகவே 12 வயது மகளின் உடலில் ஆங்காங்கே கைவைத்து பாலியல் துன்புறுத்ததிலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து தப்பிய பாஸ்கர் தன் மகளுடன் சென்று காவேரிபாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின்பேரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணியில் இருந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சிவா, ரஜினி உட்பட மூன்று ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்னளர். மேலும் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூவரும் மீதும் மிரட்டியது, பா-யல் தொந்தரவு கொடுத்தது உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"