அழகாய் இல்லையென புதுப்பெண்ணை சித்ரவதை செய்த கணவர்


நாகர்கோவிலை அடுத்த வில்லுக்குறி குன்னக்குழி விளையை சேர்ந்தவர் ஜெயசிங். இவரது மனைவி ஆக்னஸ் ஷைனி (வயது 23). இவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. திருமணமான சில நாட்களில் இருந்தே எனது கணவர் நீ அழகாய் இல்லை எனக்கூறி அடிக்கடி சித்ரவதை செய்தார். நேற்றும் நீ அழகாய் இல்லை எனவே எனக்கு நீ தேவை இல்லை என ஆவேசமாக கூறியதோடு பெண் என்றும் பாராமல் என்னை சமராரியாக அடித்து உதைத்து தாக்கினார்.

மேலும், கத்தியை காட்டி உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயசிங்கை கைது செய்தனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"