டிவிட்டர்????????1.டிவிட்டர் என்பது சிறிய அளவில் வார்த்தைகளை கொண்டு நிறைய பேருக்கு அனுப்பும் எஸ் எம் எஸ் போன்றது.

2.இன்னும் டிவிட்டர் அக்கவுண்டை நீங்கள் தொடங்கவில்லை எனில் இனிமேல் தொடங்கி விடுங்கள்.ஆனால் முதலில் யாரை நோக்கி நீங்கள் செய்திகளை அனுப்ப போகிறீர்கள் எனபதை முதலில் தெரிவு செய்யுங்கள். அதற்கு தகுந்தாற்போல நண்பர்களை தேர்ந்தெடுங்கள் அல்லது பாலோயர்ஸ் அதை பொறுத்துதான் அமைவார்கள்.எந்த காரணத்துக்கு டிவிட்டர் ஆரம்பிக்க போகிறீகள் என்பதில் தெளிவாகிடுங்கள் முதலில்..

3.உங்கள் பயன்பாட்டை குறித்து தெளிவு பிறந்தது உங்கள் அக்கவுண்டை உருவாக்குங்கள் அது உங்கள் பெயர் உங்கள் நோக்கத்தை தன்னிடத்தில் கொண்டிருக்கும் படி அமையட்டும்.

4.அடுத்து தேடுதலை தொடருங்கள் வசிப்பிடம் ஆர்வம் உங்கள் துரை சார்ந்தவர்கள் அல்லது உங்களது லட்சியம் சார்ந்தவர்களின் தொடர்பு மிக முக்கியம் அது டிவிட்டரில் நீங்கள் இணைந்ததற்கான காரணத்தை பூர்த்தியாக்கிடும்.

5.அடுத்து அக்கவுண்ட் ஓபன் செய்ததும் பிளாக்கரை போன்று தூங்க போய்விடாதீர்கள் தினமும் குறைந்தது ஐந்து டிவிட் விடுங்கள் உங்கள் வியாபாரம் தொழிலில் நீங்கள் சொல்ல விரும்புவது அல்லது நீங்கள் படித்த புத்தகம் அல்லது நீங்கள் நினைப்பது இதைப்போல........

6.மிகுந்த முனைப்புடன் டிவிட்டரில் இயங்குங்கள் கேள்விகளை கேளுங்கள் பதில் அளியுங்கள் மரியாத்தையுடனும் விரைவாகவும் நல்ல டிப்ஸ்களை வழங்குகள்..

7.நிறைய டிவிட்டர் அப்ளிகேசன் டூல்கள் இருக்கின்றன அவற்றை பயன்படுத்துங்கள் அவை உங்களது டிவிட் எக்ஸ்பீரியன்சை எளிதாக்கும்..

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"