சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது !


உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம், இந்திராபுரத்தில் ‘மதர்ஸ் பிரைட்’ என்ற தனியார் பள்ளியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.இந்த பள்ளியின் ஆசிரியையின் 3 1/2 வயது மகள் மழலையர் வகுப்பில் (பிரி.கே.ஜி.) படித்து வருகிறாள்.

சில நாட்களாக இந்த சிறுமி, பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடித்து வீட்டிலேயே இருந்து வந்தாள்.இது குறித்து அம்மா கேட்டதற்கு, பள்ளி இடைவேளையின் போது தன்னையும் தன்னுடன் படிக்கும் இன்னொரு மாணவியையும் அங்கு பணியாற்றும் 25 வயது மிக்க இளைஞர் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்யப்பட்டு குறித்த அந்த இளைஞரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இந்த இரு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைகளுக்காக காஜியாபாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"