அலுவலகத்தில் வேலை செய்யும் போது ஆபாச தளங்களை பார்ப்பதாக ஆய்வில் தகவல்


அலுவலகத்தில் வேலை செய்யும் போது தினசரி 4 கோடி பேர் இணையதளத்தில் ஆபாச படங்களைப் பார்ப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. உலக அளவில் 6 கோடி பேர் இலவச ஆபாச தளங்களை ஆன் செய்கின்றனராம்.

என்னதான் வீட்டில் சந்தோச சமாச்சாரங்கள் நடந்தாலும் அந்த மாதிரி படங்களையோ, போட்டோக்களையோ, செய்திகளையோ ரகசியமாக படிப்பதில் பலருக்கும் தனி சுகம்தான். இன்றைக்கும் உலக அளவில் பலகோடி மக்கள் தினசரி ரகசியமாக ஆபாச படங்களை இணையதளங்களில் பார்த்து ரசித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

இது தொடர்பாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த செக்ஸ் தெரபிஸ்ட் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

உலகம் முழுவதும் 6 கோடி மக்கள் இலவச ஆபாச வெப்சைட்களை லாக்ஆன் செய்கின்றனராம். இதில் மூன்றில் இருவர் அதாவது 4 கோடி பேர் தங்கள் அலுவலகத்தில் உள்ள வெப்சைட்களில் அந்த மாதிரியான படங்களைப் பார்க்க ஆர்வம் காட்டுவதாக ஆய்வில் தெரியவந்தது.

ஆஸ்திரியா நாட்டின் சல்ஸ்பெர்க் நகரில் நடைபெற்ற கான்பரென்ஸ் ஒன்றில் பேசிய பெர்லினைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், ஆபாச படங்களைப் பார்ப்பது செக்ஸ்சுவல் நடத்தையோடு தொடர்புடையது என்று கூறினார். இன்றைய மாடர்ன் உலகில் ஆபாச படங்களை தனியாகவோ, நண்பர்களுடன் இணைந்தோ பார்ப்பது அதிகமாகிவிட்டது என்று தெரபிஸ்ட்கள் கூறியுள்ளனர். இதற்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இளையதலைமுறையினரை பார்க்கத்தூண்டும், படிக்கத்தூண்டும் எக்ஸ் தரமுடைய இணையதளங்கள் இன்றைக்கு மலிவாகிவிட்டதே இதற்குக் காரணம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"