சிநேகிதியின் கைபேசி எண்ணை கால்கேர்ல் எண்ணாக இணையத்தில் பகிர்ந்த பெண்


சக பணியாளரான பெண்ணுடைய கைபேசி எண்ணை தவறாக பயன்படுத்தி இணையதளத்தில் வெளியிட்ட பெண் இன்ஜினியர் ஒருவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் இன்ஜினியர் ஒருவர், தனது செல்போனுக்கு அடிக்கடி தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு ஆபாசமாகப் பேசுவதாகவும் விசாரித்ததில் தனது கைபேசி எண்ணை யாரோ தவறாக பயன்படுத்தி இணையதளத்தில் வெளியிட்டு, தன்னை பாலியல் தொழில் செய்யும் பெண் என்று சித்தரித்துள்ளார்கள். என்றும் பொலீசாரிடம் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சைபர்கிரைம் போலிசார் விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சி காத்திருந்தது., அந்த பெண்ணுடன் பணிபுரியும் சக பணியாளறும் அவரின் சிநேகிதியுமான பெண் இன்ஜினியர் ஒருவர் தான் இந்த குற்றத்தை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்ணை காவல் துறை கைது செய்துள்ளனர்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"