மனைவியின் டெலிவரியைப் பார்த்து செக்சை வெறுத்த கணவன்... ஒரு அனுபவ ரிப்போர்ட்!


என் மனைவியின் பிரசவத்தை நேரில் பார்த்த பின்னர் எனக்கு ஒரு வருடத்திற்கு செக்ஸே வெறுத்துப் போய் விட்டது என்று கூறியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் மார்ட்டின் டப்னி என்பவர்.

மனைவி கர்ப்பமாக இருக்கும்போது 'சைடு சானல்' பார்ப்பதில் விருப்பம் உள்ளவர்கள் நிறையப் பேர் உள்ளனர். ஆனால் தனது மனைவியின் பிரசவத்தை நேரில் பார்த்த மார்ட்டின், அதன் பின்னர் ஒரு வருடத்திற்கு செக்ஸ் குறித்தே நினைக்கவில்லையாம். மாறாக மனைவியுடனேயே இருந்து அவரை சிறப்பாகப் பார்த்துக் கொண்டாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

நானும் சரி எனது மனைவியும் சரி பத்து வருடமாக அழகான வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த ஒரு வருடமாக நாங்கள் இரவில் தனித்தே படுத்துத் தூங்குகிறோம். எங்களுக்குள் செக்ஸ் ரீதியான எந்த செயல்பாடுகளும் இல்லை, பேச்சுக்களும் இல்லை. இருவருக்குமே செக்ஸில் விருப்பம் இல்லாமல் இல்லை. ஆனால் செக்ஸ் இடம் பெறவில்லை.

நான் எனது மனைவி டயானாவுக்கு அருகில் போவேன். அவரும் என்னிடம் நெருங்கி வருவார், ஆனால் அவ்வளவுதான், அதற்கு மேல் இருவரும் நெருங்குவதில்லை. எனது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல உணர்வேன், இதயம் தாறுமாறாக துடிக்கும். ஆனாலும் அத்தோடு நிறுத்திக் கொள்வேன்.

ஏன் இப்படி... எங்களுக்குள் கடந்த ஒரு வருடமாக செக்ஸ் நடக்கவில்லை என்றவுடன் பதறிப் போகத் தேவையில்லை. காரணம், எங்களுக்குள் அதையும் தாண்டிய அன்பும், பரிவுமே மேலோங்கியிருந்தது. டயானாவை முன்பை விட அதீதமாக இப்போது காதலிக்கிறேன்.

டயானாவுக்கும், எனக்குமான செக்ஸ் பந்தம் ஒரு வருடமாக பிரேக் ஆக இருப்பதற்கு டயானாவின் பிரசவம்தான் காரணம். அவரது பிரசவத்தை நான் நேரில் பார்த்தபோது எனக்கே பெரும் அவமானமாகி விட்டது, வெட்கப்பட்டேன். செக்ஸை விட மிகப் பெரிய விஷயம் தாய்மை, அன்பு என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன்.

எங்களுக்குள் செக்ஸ்தான் குறைந்து போய் விட்டதே தவிர, டயானாவுடனான எனது மன நெருக்கம் முன்பை விட மேலும் அதிகமாகியுள்ளது என்பதே உண்மை.

எனது மனைவிக்குக் குழந்தை பிறந்தபோது ஒரு ஆண் என்பதை விட ஒரு தந்தை என்ற உணர்வுதான் என்னிடம் மேலோங்கியிருந்தது.

எனது மனைவி 3 நாட்கள் மருத்துவமனையில் சிரமப்பட்டாள். அதையெல்லாம் நேரில் பார்த்தபோது நான் கலங்கிப் போய் விட்டேன். மிகவும் கஷ்டமான நாட்கள் அவை. நான் அப்போது பொறுப்பாக செயல்பட நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதை நானும் விடவில்லை.

குழந்தை பெற்ற பிறகு சில வாரங்களிலேயே பெண்களில் பெரும்பாலானோர் செக்ஸ் வாழ்க்கைக்குத் தயாராகி விடுகின்றனர். ஆண்களும் தயாராகவே இருக்கின்றனர். ஆனால் எங்களுக்குள் அப்படி எந்த அவசரமும் ஏற்படவில்லை. செக்ஸ் இல்லாமல் ஒரு வாழ்க்கையா என்று எனது நண்பர்கள் சிலர் தங்களது மனைவியை விட்டுப் பிரிந்து சென்றுள்ளனர். ஆனால் அது எனக்கு இப்போது ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனால் தனது மனைவியின் பிரசவத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு ஒரு கணவருக்கு கிடைத்தால் நிச்சயம் செக்ஸ் அவருக்குப் பெரிதாகத் தோன்றாது என்பது எனது எண்ணம் என்கிறார் மார்ட்டின்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"