ஆண் குழந்தைக்காக தவம் செய்யும் வித்தியாசமான மனிதர்


ஆண் குழந்தை ஒன்றுக்கு தகப்பனாக வேண்டும் என்கிற தீராத ஆசையால் கடந்த 37 வருடங்களாக மிகவும் வித்தியாசமான தவம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார் இந்தியாவைச் சேர்ந்த 65 வயது நபர். இவரின் பெயர் Guru Kailash Singh. வரணாசியில் உள்ள Chatav என்கிற கிராமத்தை சேர்ந்தவர்.

ஆண் குழந்தை வரம் வேண்டும் என்று சித்தர் ஒருவரிடம் கேட்டு இருக்கின்றார். சித்தரின் அறிவுரையை அருள்மொழியாக மதித்து கடந்த மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக இம்மி அளவேனும் பிசகாமல் நடந்து வருகின்றார்.

குளிக்காமல் இருக்கின்ற பட்சத்தில் ஆண் குழந்தை ஒன்றுக்கு இவர் தந்தை ஆவார் என்று சொல்லி இருக்கின்றார் சித்தர்.

அன்றில் இருந்து இவர் குளிக்கின்றமையை நிறுத்திக் கொண்டார். இவரது உடலில் இருந்து எழுகின்ற நாற்றத்தை மனைவியால் தாங்க முடியாது உள்ளது. குளிக்காத பட்சத்தில் இவரோடு படுக்க மாட்டார் என்று மனைவி அவ்வப்போது மிரட்டி வருகின்றார். ஆனால் இவர் ஒன்றுக்கும் மசிகின்றார் இல்லை.

சாமியாரின் வாக்கு நிச்சயம் பலிக்கும் என்று அப்படியே நம்புகின்றார்.

1974 ஆம் ஆண்டு இவரின் இத்தவம் ஆரம்பம் ஆனது. தலை மயிரையும் மழிக்கவில்லை. தலை மயிர் சடையாக வளர்ந்து நிலத்தை தொட்டுக் கொண்டு நிற்கின்றது. இதன் நீளம் ஆறு அடி.

ஆயினும் சாமியாரின் வாக்கும் இன்னமும் பலிக்கவில்லை. ஏழு பெண் குழந்தைகளுக்கு மாத்திரம் தந்தை ஆகி இருக்கின்றார். இவர் ஒரு பண்ணைத் தொழிலாளி ஆவார்.

இவர் ஒவ்வொரு நாள் மாலையும் நெருப்பில் காய்வார். நெருப்புக் குளியல் என்று இதை சொல்கின்றார். இதன்போது கஞ்சா இழுப்பார், சிவபெருமானை வழிபடுவார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"