கொலையில் முடிந்த முரட்டுத்தனமான உடலுறவு


தன்னுடன் வசித்து வந்த தனது காதலியுடன் முரட்டுத்தனமான செக்ஸ் உறவை மேற்கொண்ட காதலன் பின்னர் தனது காதலியை மோசமான முறையில் தாக்கி கொலை செய்து விட்டார்.

அமெரிக்காவின் உடா மாகாணத்தைச் சேர்ந்தவர் 43 வயதான ஜெப்ரி டீன் ஒயிட். இவரும், 38 வயதான மெரின் ஸ்டார்க்கும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

சம்பவத்தன்று தனது காதலியுடன் முரட்டுத்தனமான செக்ஸில் ஈடுபட்டுள்ளார் ஒயிட். உறவு முடிந்ததும் மோதல் வெடித்தது. அப்போது மெரினை கீழே தள்ளி சரமாரியாக உதைத்துள்ளார். இதில் மெரினின் விலா எலும்பு முறிந்து போனது. அவர் வலியால் துடித்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரது இரு கண்களையும் பிடுங்க முயற்சித்துள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

பின்னர் ஒயிட்டே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீஸார் விரைந்து வந்து மெரினை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மெரின் இறந்து போய் விட்டதாக அங்கு டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஒயிட் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்தபோது மெரின், ஒயிட்டின் இரு குழந்தைகளும் வீட்டில்தான் இருந்துள்ளனர். தாயும், தந்தையும் சண்டை போட்டுக் கொள்வதை அவர்கள் பார்த்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மெரினின் தாயார் மற்றும் உறவினர்கள் கூறுகையில், ஒயிட் முரட்டுத்தனமான உறவில் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். மெரினை சரமாரியாக அடிப்பதும் அவரது வழக்கமாக இருந்தது. தற்போது அது கொலையில் போய் முடிந்துள்ளது கொடுமையானது என்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"