நேர்த்தியாக உடை அணிவதில் இந்தியர்கள் முதலிடம்


இந்தியர்கள்தான் நேர்த்தியாக உடை அணிந்து வேலைக்கு செல்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. அரசு நிர்வாகம், ஊழல், சுகாதாரம், ஏழ்மை என்று பல ஆய்வுகளில் மட்டமான இடம் கிடைத்த வருத்தத்தில் இருந்தவர்களுக்கு ஆறுதல் பரிசு.

வேலைக்கு செல்லும்போது ஸ்மார்ட்டாக உடை அணிகிறீர்களா? அரை டிரவுசர் அணிந்து வேலைக்கு போவது சரிதானா? இவைதான் கேள்விகள். 24 நாடுகளில் 12 ஆயிரம் பேரிடம் கேட்கப்பட்டது. இந்தியர்களில் 58 சதவீதம் பேர் முதல் கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள். 62 சதவீதம் பேர் ஆபீசுக்கெல்லாம் டிரவுசரில் போகக்கூடாது என்கின்றனர். அந்த அடிப்படையில், அலுவலகத்துக்கு கண்ணியமான முறையில் உடையணிந்து செல்பவர்களில் இந்தியர்கள்தான் முதலிடம் என்று ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். அடுத்து தென் கொரியா (47%), சீனா (46), அமெரிக்கா (37) கடைசியில் ஹங்கேரி (12).

வேலை என்று வந்துவிட்டால் அதற்கான சம்பிரதாயத்தை பின்பற்றுவதே முறை என்று நம்மவர்கள் கருதுகின்றனர். 1980 வரை உலகமே அப்படி நினைத்தது. கம்ப்யூட்டர், சாப்ட்வேர் போன்ற வார்த்தைகள் பிரபலமாக தொடங்கியதும் அலுவலகத்துக்கு கேஷுவல் டிரஸ் போதாதா என்ற கேள்வி எழுந்தது.

கோட், சூட், டையுடன் விடிய விடிய உழைப்பது நரகத்தில் உழல்வதற்கு சமம். நேரம் காலம் பாராமல் சாப்ட்வேர் இன்ஜினியர்களை வேலை வாங்க சிலிக்கான் வேலி தொழிலதிபர்கள் அறிமுகம் செய்த உத்தி ஷார்ட்ஸ்,ஷர்ட் அனுமதி.
வழக்கமான உழைக்கும் வர்க்கத்தில் இருந்து தங்களை வித்தியாசமாக காட்டிக் கொள்ள வேறு பிரிவினரும் சம்பிரதாய உடையை உதறினர்.

கல்லுடைப்பது போன்ற கடினமான பணிகளை செய்பவர்களுக்கு ஜீன்ஸ் ஷர்ட் வசதியாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக ‘படைப்பாளிகள்’ ஜீன்ஸ் + தொளதொளா சட்டைக்கு மாறினர். உடை விதிகள் அமலில் இல்லாத நிறுவனங்களில்கூட, உடையில் ஆர்வம் காட்டாதவர்கள் வேலையிலும் ஏனோதானோ என்றுதான் இருப்பார்கள் என்று நிறைய பேர் நம்புகிறார்களாம்.

இப்போதெல்லாம் அநேக கல்லூரிகளில் பார்மல் உடைக்கு மட்டுமே அனுமதி.
சில பெண்கள் கல்லூரிகளில் கூட புடவையில் வந்தால் மட்டுமே அனுமதி
நேர்த்தியாக உடை அணிபவர்கள்தான் பெரிய பொறுப்புகளுக்கு முன்னேற முடியும் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"