அந்த மாதிரி படங்களைப் பார்ப்பதில் எந்த நாட்டினர் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்?


பல்லாயிரக்கணக்கான மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தினசரி 5 மணிநேரம் போர்ன் படங்களை பார்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக காலை 9மணி முதல் 5

வரை அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள்தான் அதிக அளவில் போர்ன் படங்களைப் பார்க்கின்றனராம்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உளவியல்துறை நிபுணர் பில் வாட்ஸ் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

போர்னோ படங்களைப் பார்த்தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்ற கூறியுள்ள ஆய்வாளர்கள் மூளை பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளனர்.

16 வயதுடைய நபர்கள் 20 நிமிடங்கள் ஒடக்கூடிய போர்னோ படங்களைப் பார்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை. அதற்கு மேல் அதிக மணிநேரங்கள் போர்னே படங்கள் பார்க்கும் நபர்களுக்கு மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல்கள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சிட்னி பல்கலைக்கழகத் சேர்ந்த ஆய்வாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் 20 சதவிகித இளைஞர்கள் போர்னோ படங்களுக்கு அடிமையாக இருப்பதோடு தங்களின் துணைவருடன் அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

மணிக்கணக்கில் போர்னோ படங்களைப் பார்ப்பவர்களுக்கு தூக்கக்குறைபாடு, விந்து வெளியேற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

போர்னோ படங்களுக்கு அடிமையானவர்கள் 30 சதவிகிதம் பேர் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த அடிமைத்தனத்தில் இருந்து எப்படி மீள்வது என்பது பற்றி மனரீதியான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமாக இருந்தாலும் அது விஷம்தான் என்கின்றனர் நிபுணர்கள். இது ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல போர்னோ படங்களைப் பார்க்கும் அனைவருக்கும்தானாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"