மனநோயாளிகளை செக்ஸ் கொடுமை செய்த டாக்டர்கள் கைது


இஸ்ரேல் நாட்டில் மனநோயாளிகளை செக்ஸ் கொடுமைக்கு ஆளாக்கியதாக டாக்டர்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் பெட்டா திக்வா நகரில் மனநல மையம் உள்ளது. இதில் 160 மனநோயாளிகள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மையத்தில் உள்ள நோயாளிகளை கட்டிலில் கட்டி வைத்து செக்ஸ் கொடுமைக்கு உள்ளாக்குவதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் சுகாதார துறைக்கு கடந்த ஆண்டு புகார்கள் வந்தன. புகார்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்த அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

மனநல மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மன நோயாளிகளிடம் டாக்டர்கள், ஊழியர்கள் முறைகேடாக நடந்து செக்ஸ் சித்ரவதை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, டாக்டர்கள், ஊழியர்கள் உள்பட 70 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"