இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த 61 வயது பாட்டி


பிரேசில் நாட்டை சேர்ந்த 61 வயது பாட்டி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.பிரேசில் நாட்டின் சாவ்பாவ்லோ என்ற இடத்தை சேர்ந்தவர் ஆன்டோனியா ஆஸ்ட்டி(வயது 61). இவரது கணவர் ஜோஸ்(வயது 55).

இந்த தம்பதியருக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.
இதனையடுத்து குழந்தையை தத்து எடுத்து கொள்ளலாம் என்று முடிவு செய்த நிலையிலும், முதுமை காரணமாக மறுக்கப்பட்டது.

இந்நிலையில் செயற்கை முறையில் குழந்தைப்பேறு அடைய முடிவு எடுத்தனர். ஆஸ்ட்டி முதல்முறையாக 10 ஆண்டுகளுக்கு முன்பாக இதற்காக முயற்சி எடுத்தார். ஆனால் பலன் இல்லை. இரண்டாவது, மூன்றாவது முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

இப்போது 4-வது முறையாக 10 ஆண்டுகளுக்கு முன் உறைய வைக்கப்பட்ட விந்தணுக்கள் மூலம் செயற்கை கருத்தரித்தல் முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் ஆன்டோனியா.மகனுக்கு ராபர்ட்டோ என்றும், மகளுக்கு சோபியா என்றும் பெயரிட்டுள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"