விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…

இன்றைய காலத்தில் நிறைய பேர் குழந்தை பெற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். இதனால் அவற்றை சரிசெய்வதற்கு அதிக பணத்தை மருத்துவரிடம் சென்று செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் மருத்துவரிடம் சென்று பரிசோத்தால், எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்வார்கள். அந்த நேரத்தில், “பின் எதற்கு ஆகவில்லை?” என்று தெரியாமல் நிறைய பேர் புலம்பிக் கொண்டிருப்பர்.

ஆனால் சிலருக்கு விந்தணு குறைவினால் கூட குழந்தையை பெற முடியாமல் இருப்பர். அவ்வாறு மருத்துவர் ஆண்களது விந்தணுக் குறைவினால் தான் தள்ளிப் போகிறது என்று சொன்னால் போதும், சிலர் அதற்காக என்னென்னவோ மாத்திரைகள், மருந்துகள் போன்றவற்றை சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறெல்லாம் சாப்பிட்டால், விந்தணு அதிகரிக்காது, உடல் தான் பெரிதும் பாதிக்கப்படும்.

சிலருக்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் ROS என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன.

ஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால், அந்த வைட்டமின்கள் ROS-ன் அளவைக் குறைக்கின்றன. மேலும் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும்.

ஆகவே விந்தணுவின் அளவு குறைவாக உள்ளது என்று நினைத்து மனதை தளர விடாமல், நம்பிக்கையோடு ஒரு சில இயற்கையான செயல்களை தொடர்ந்து செய்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி, அதிகரிப்பதோடு உடலும் நன்கு அரோக்கியமாக இருக்கும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"