சிறுமிகளிடம் ‘செக்ஸ்’ வைக்க திட்டமிட்ட இந்திய டாக்டர் கைது !


அமெரிக்காவில் சிறுமிகளிடம் உறவு வைத்துக் கொள்வது தொடர்பாக புறப்பட்ட டாக்டரை எப்பிஐ அதிகாரிகள் வழியிலேயே மடக்கிக் கைது செய்தனர். அந்த டாக்டர் ஒரு இந்தியர் ஆவார்.

டென்னஸியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த டாக்டரின் பெயர் விகுல் படேல். இவர் உள்ளுறுப்பு மருத்துவம் பார்க்கும் டாக்டர் ஆவார். செப்டம்பர் 2ம் தேதி இவர் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ள சில புரோக்கர்களுடன் இன்டர்நெட் சாட்டிங் மூலம் பேசியுள்ளார். அப்போது சிறுமிகள் சிலர் தனக்கு உறவுக்காக தேவை என்று கூறியுள்ளார். இந்த உரையாடலை எப்பிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து விகுல் படேலின் கிளினிக்குக்குச் சென்ற எப்பிஐ அதிகாரிகள், சிறுமிகளைப் பார்க்கப் புறப்பட்டுக் கொண்டிருந்த டாக்டரைக் கைது செய்தனர்.

அவர் மீது சிறார் பலாத்கார சட்டம் மற்றும் கம்ப்யூட்டர் போர்னோகிராபி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் விகுல் படேல். இருப்பினும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"