எலும்பு கூட்டுடன் செக்ஸ் நடத்திய பெண்


மனித எலும்புக் கூட்டுடன் குடும்பம் நடத்திய பெண்ணை ஸ்வீடன் போலீசார் கைது செய்துள்ளனர். தென்மேற்கு ஸ்வீடனை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், மண்டை ஓடுகளுக்கு முத்தம் கொடுப்பது போன்றும், எலும்புக்கூட்டை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது போலவும் வகைவகையாக புகைப்படங்கள் எடுத்து வைத்திருப்பதாக ஸ்வீடன் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அந்த பெண் யாரையாவது கொன்றுவிட்டு, அந்த எலும்புக்கூடுகளை மறைத்து வைத்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் அவரது வீட்டை போலீசார் சோதனையிட்டனர். 6 மண்டை ஓடுகள், முதுகுத் தண்டு எலும்புகள், என 100 வகையான எலும்புகளை தனது கட்டிலில் அடுக்கி வைத்து, அந்த பெண் சில ஆண்டுகளாக எலும்புக் கூட்டுடன் குடித்தனம் நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையொட்டி அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

இறந்தவரின் அமைதியை கெடுத்ததாக, அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 'எலும்பு கூடுகளுடன் இன்பம் அனுபவிப்பது எப்படி?', 'எனது முதல் அனுபவம்' என்ற தலைப்பில் சில சி.டி.க்களும் அந்த பெண்ணின் வீட்டில் கைப்பற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்னர், எலும்புக்கூடுகளுடன் குடித்தனம் நடத்துவது குறித்து இந்த பெண் இணையதளத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில் 'என் மனதுக்கு பிடித்த வகையில் நான் வாழ்கிறேன். இது எனக்கு பிடித்திருக்கின்றது. எனக்கு பிடித்தமான ஆண், உயிருடன் இருந்தாலும், இறந்து போயிருந்தாலும், எப்போதுமே அவர் எனக்கு மிகவும் மதிப்புக்குரிய நபர்தான். அவர் மூலம் இல்லற இன்பத்தை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். எதிர்பாராத விதமாக ஏதாவது நேர்ந்தால், அதற்கான தண்டனையை அனுபவிக்கவும் நான் தயாராகவே உள்ளேன்' என்று அந்த பெண் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"