2 வருடமாக காதலியை தூங்கும் போது கற்பழித்த கொடூர காதலன்!


இங்கிலாந்தில் இளம் பெண் ஒருவரை அவருடைய காதலன், கடந்த 2 வருடமாக தூக்கத்தில் வைத்து கற்பழித்து வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த ராபர்ட் பிரையர் என்பவர் நவோமி ஹாம்ப்சன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

தினசரி தனது காதலிக்கு இரவில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து விடுவாராம். நவோமி ஆழ்ந்த தூக்கத்திற்குப் போன பின்னர் தவறான முறையில் உறவு கொண்டு வந்துள்ளார். மேலும் இதை செல்போனிலும் படம் எடுத்துக் கொண்டு அதை தனது கணனியிலும் பதிவு செய்து வைத்து வந்துள்ளார்.

பலாத்காரம் செய்வதற்கு முன்பு தனது காதலியின் விரல் நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டும், நகைகளை அணிவித்தும் அலங்காரப்படுத்திய பின்னரே இவ்வாறு செய்வாராம். காலையில் கண் விழித்துப் பார்க்கும் நவோமிக்கு தன் உடலில் நகைகள் இருப்பதும், நெயில் பாலிஷ் போடப்பட்டிருப்பதும் குழப்பத்தை தந்துள்ளது. இதுகுறித்து ராபர்ட்டிடம் கேட்டால், ஏதாவது பதில் சொல்லி சமாளித்துள்ளார்.

இந்நிலையில் ராபர்ட் குறித்துப் பொலிஸாருக்குத் தெரிய வரவே அவர்கள் அதிரடியாக வீட்டுக்கு வந்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ராப்ட்டின் செயல் பொலிஸாருக்கும், நவோமிக்கும் தெரிய வந்து அதிர்ந்துள்ளனர். இதுகுறித்து நவோமி கூறுகையில், அவன் எனது காதலனே இல்லை, சாத்தான். என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வந்துள்ளான். பொலிஸார் மட்டும் வந்திருக்காவிட்டால் நான் அழிந்தே போயிருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"