கணினியில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் மென்பொருட்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் மென்பொருள் இலவசமாக


நாம் ஏதாவது ஒரு வலை உலாவியின் (Internet browser) வழியாக வலைப்பக்கத்தை பார்வையிடுகிறோம் அல்லது நமக்கு வேண்டிய மென்பொருளை தரவிறக்குவோம். இந்த வேலையின் போது வலை உலவி மட்டுமே இணையத்தை பயன்படுத்துகிறது என்று நாம் நினைப்போம்.

ஆனால் வேறு சில மென்பொருளின் செயல்பாடுகளும் இணையத்தை நமக்கு தெரியாமலே அணுகுகின்றன. எப்படிஎன்றால் கணினியில் உள்ள ஆண்டிவைரஸ் மென்பொருள் தானாகவே தன்னை மேம்படுத்திக்கொள்ள (Update) இணையத்தை பயன்படுத்துகின்றன. இதனால் நமது இணையத்தின் வேகமும் கொஞ்சம் குறைகிறது.

தேவையில்லாத மென்பொருள்கள் அடிக்கடி மேம்படுத்திக்கொள்ள இணையத்தை அணுகலாம்.மால்வேர்கள் கூட பயன்படுத்தலாம். இவைகளை கட்டுபடுத்தினால் இணைய வேகமும் அதிகரிக்கும்.

இந்த மென்பொருளின் விஷேசம் என்னவென்றால் அவ்வப்போது மாறி மாறி வரும் இணையத்தை பயன்படுத்தும் மென்பொருளை (processes) வண்ணங்களில் சுட்டிக்காட்டுகிறது.

தேவைப்படாத செயல்பாடுகள் எனில் வலது க்ளிக் செய்து அதன் இயக்கத்தை உடனேநிறுத்திவிடலாம். இந்த மென்பொருளை கணினியில் நிறுவ தேவையில்லை( No installation ) அப்படியே இயக்கலாம்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"