சந்தோஷமான மரணத்தைத் தர மார்பகங்களால் அழுத்திக் கொலை செய்ய முயற்சித்த காதலி.


தன்னுடைய காதலி அவரது மார்பகங்கள் மூலம் தன்னை மூச்சுத் திணறடித்துப் படுகொலை செய்ய முயற்சித்ததாக நபரொருவர் குற்றஞ்சாட்டி வழக்குத் தாக்கல் செய்த சம்பவம் ஜெர்மனியில் இடம்பெற்றுள்ளது.

வக்கீலாக கடமையாற்றும் ரிம் ஸ்கமிட் என்வரே தனது காதலியான பிரான்ஸிக்கா மீது இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒருவரையொருவர் சந்தித்து காதல் கொண்ட பிரான்ஸிஸ்காவுக்கும் ரிம் ஸ்கமிட்டுக்கும் இடையிலான உறவு அண்மைக்காலமாக விரிசல் கண்டிருந்தது.

வக்கீலாக தொழில் வாய்ப்பு பெற்ற ரிம் ஸ்கமிட், தன்னிடமிருந்து பிரிந்து செல்வதற்குத் திட்டமிடுவதாக சந்தேகம் கொண்ட பிரான்ஸிஸ்கா கடும் சினமடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவ தினம் இருவரும் சந்தித்துக்கொண்டபோது பிரான்ஸிஸ்கா, ரிம் ஸ்கமிட்டின் தலையைப் பற்றிப்பிடித்து தனது மார்பகங்களால் அழுத்தி மூச்சுத் திணறடித்து படுகொலை செய்ய முயற்சித்துள்ளார்.

நான் உனக்கு என்னால் இயன்றவரை சந்தோஷமான மரணத்தைத் தர விரும்புகிறேன்” என இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெரும் சிரமத்தின் மத்தியில் பிரான்ஸிஸ்காவிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட ஸ்கமிட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"