பெண்களை வலையில் வீழ்த்தி படம் பிடித்து ரசிக்கிறார்... மனைவி போலீஸில் புகார்


எனது கணவர் பல பெண்களை தனது வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து அதை தனது செல்போனில் வைத்துப் பார்த்து ரசிக்கிறார் என்று கூறி மனைவிஒருவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி. 32 வயதான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது வீட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 1998ம் ஆண்டு எனது வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்த பிரபுவை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 14 வயதில் புவனேஸ்வரன் என்ற மகனும், 12 வயதில் திணேஷ் குமார் என்ற மகனும் உள்ளனர். எனது கணவர் ஒரு பெண் பித்தர்.

எனக்குத் திருமணமாவதற்கு முன்பே அவருக்கு பல பெண்களுடன் உறவு இருந்தது. எனது தோழி சுசித்ராவுடன் நெருக்கமாக பழகி வந்தார்.அவர் மூலம் அறிமுகமான ஸ்ரீதேவி என்ற நர்ஸுடனும் தொடுப்பு இருந்தது.இதில் ஸ்ரீதேவியுடன் மிகவும் நெருக்கமாக பழகி அவர் மூலம் 2 குழந்தைகளையும் அவர் கொடுத்துள்ளார். இவரது பழக்க வழக்கம் பிடிக்காததால் 2009ம் ஆண்டு விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்குப் போனேன். ஆனால் என்னை மிகவும் கெஞ்சி வழக்கை வாபஸ் பெற வைத்து விட்டார்.

நானும், பிள்ளைகள் நலனுக்காக மீண்டும் சேர்ந்து வாழ சம்மதித்தேன். ஆனால் அவரது காமலீலைகள் நிற்கவில்லை. தொடர்ந்து பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார்.

அவரது செல்போனை தற்செயலாக எடுத்துப் பார்த்தபோது அதில் பல பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தன.அதுகுறித்துக் கேட்டால், இவர்களுடன் எனக்குப் பழக்கம் உள்ளது.இவர்களது ஆபாசப் படங்களைப் பார்க்காமல் எனக்குத் தூக்கம் வராது என்று பச்சையாக கூறுகிறார்.

எனது கணவர் திருந்துவது போலத் தெரியவில்லை. என்னை மட்டுமல்லாமல், என்னைப் போல பல பெண்களின் வாழ்க்கையை அவர் சூறையாடியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் காமாட்சி.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"