ஆய்வுக் கட்டுரைகளின் பெட்டகம்


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்படும் ஆய்விதழ் தமிழியல் - Journal of Tamil Studies இல் 1972 முதல் வெளியான அத்தனை ஆய்வுக் கட்டுரைகளும், புத்தக மதிப்புரைகளும் சுமார் 9000 பக்கங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் நிலையில் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இதுவரை Journal of Tamil Studies இல் 76 இதழ்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் கடைசி 4 இதழ்கள் நீங்கலாக, அதாவது முதல் ( 001 - September 1972 ) இதழ் தொடக்கம் எழுபத்திரண்டாவது ( 072 - December 2007 ) வரையிலான இதழ்களில் இருந்து ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தையும் நீங்கள் தரவிறக்கம் செய்யலாம்.

306 முதன்மைக் கட்டுரையாளர்களால் எழுதப்பட்ட 611 கட்டுரைகளும் 55 கட்டுரைப் பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.கடைசி 4 இதழ்களின் உள்ளடக்க அட்டவணை மட்டும் கிடைக்கும்.

77 வது இதழ் வெளியாகும் போது 73 இதழின் கட்டுரைகள் தரவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படும். இவ்வாறே எதிர்காலத்தில் தொடரும்.

இணையதளம் செல்ல கீழே சொடுக்கவும்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"