சுய இன்பம் செய்வதில் அதிகரிக்கும் பெண்களின் நாட்டம்? ஆய்வில் தகவல்!!


ஆண்கள் மட்டும்தானா சுய இன்பம்… இல்லையில்லை பெண்களும் அதில் ஆண்களை மிஞ்சும் வகையில் முன்னணியில் இருப்பதாக இங்கிலாந்தின் சன் இதழ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 92 சதவீத பெண்கள் சுய இன்பத்தில் ஆர்வம் காட்டுகின்றனராம்.1953ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் சுய இன்பப் பழக்கம் கொண்ட பெண்களின் எண்ணிக்கை 62 சதவீதமாகவும், 1979ல் எடுக்கப்பட்ட ஆய்வில் அது 74 சதவீதமாகவும் இருந்ததாக கூறும் சன், தற்போது கிட்டத்தட்ட அத்தனை பெண்களுமே சுய இன்பப் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்று கூறுகிறது.

சுய இன்பம் நல்லதா கெட்டதா என்பதில் இன்னும் கூட நிறையப் பேருக்கு குழப்பமும், சந்தேகமும், பயமும் இருக்கத்தான் செய்கிறது. அதேசமயம், பலருக்கு இது விட முடியாத பழக்கமாக மாறிப் போய் விடுகிறது. பலர் திருமணமான பிறகும் கூட சுய இன்பப் பழக்கத்தை தொடருகின்றனர். கேட்டால், விட முடியவில்லை என்கின்றனர். ஆனால் அவர்களால் விட முடியாமல் போவதற்கு அதில் ஏற்படும் பிடிப்பு மட்டும் காரணமல்ல, அவர்களின் திருமணத்திற்குப் பிந்தைய செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் போவதும் கூட ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

சுய இன்பப் பழக்கம் என்பதை கெட்டது என்றோ நல்லது என்றோ கூற முடியாது. இயற்கையான வாய்ப்புக்கு வழியில்லாத போதுதான் சுய இன்பப் பழக்கத்தை நாடுகின்றனர். அதில் அவர்களுக்கு மன திருப்தியும், சந்தோஷமும் ஏற்படுகிறது. அதேசமயம், இந்தப் பழக்கம் தொடர்கதையானால் அது மன ரீதியான பல பிரச்சினைகளுக்கு வித்திடலாம். தன்னம்பிக்கை குறையும். நம்மால் இயற்கையாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முடியாது என்ற சந்தேகம் வந்து விடும். எப்போதும் ஒரு விதமான குற்ற உணர்ச்சியுடன் இருக்க நேரிடும் என்கிறார்கள் அவர்கள்.

ஆனால் சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபட்டிருப்போரோ அதை நிராகரிக்கின்றனர். நிச்சயம், குற்ற உணர்ச்சி எங்களுக்கு ஏற்படுவதில்லை. மாறாக, மன பாரம் குறைகிறது, உற்சாகத்துடன் அடுத்த வேலையைப் பார்க்க முடிகிறது என்கிறார்கள் அவர்கள்.

பெண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உறவின்போது பலமுறை உச்ச நிலை ஏற்படுவது இயல்பானது. ஆனால் ஆணோ, உறவை சுருக்க முடித்துக் கொள்வதில் நம்பர் ஒன். எனவே பெரும்பாலான பெண்களுக்கு உறவில் பெரும்பாலும் திருப்தி ஏற்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு சுய இன்பம்தான் உற்ற துணையாக இருக்கிறது என்கிறார்கள் மன நல மருத்துவர்கள்.

சுய இன்பப் பழக்கத்தால் சில உடல் ரீதியான நன்மைகளும் கூட ஏற்படுகின்றன என்கிறார்கள் டாக்டர்கள். அதாவது தொடர்ச்சியாக சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் உள்ள ஆண்களுக்கு புராஸ்டேட் கேன்சர் வரும் வாய்ப்பு குறைவாக இருக்கிறதாம்.

செக்ஸ் ரீதியாக உடல் கிளர்ச்சி அடையும் பெண்களுக்கு, அதற்கான வாய்ப்பு கிடைக்காத போது பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது. அதற்காக தூக்க மாத்திரை உள்ளிட்டவற்றை நாடுவதை விட சுய இன்பப் பழக்கம் அவர்களை நிம்மதிப்படுத்த உதவுகிறது. எனவே அதை தவறு என்று கூற முடியாது என்கிறார்கள் மன நல நிபுணர்கள்.

சுய இன்பப் பழக்கம் கொண்ட பெண்கள் செக்ஸ் உறவின்போது சிறப்பாக செயல்படுவார்கள் என்று ஒரு புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது. இவர்களுக்கு தங்களது உறுப்புகள் குறித்த விழிப்புணர்வும், அனுபவமும் அதிகமாக இருக்கும். இதனால் இயற்கையான செக்ஸ் உறவின்போது இவர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்களது பார்ட்னர்களை மகிழ்விப்பார்கள் என்கிறது அந்த புள்ளிவிவரம். மேலும் தங்களுக்கு எத்தகைய தொடுதல், உணர்ச்சியைத் தூண்டும் என்பதையும் இவர்கள் அறிந்து வைத்திருப்பதால் அதை பார்ட்னர்களிடம் கேட்டுப் பெறுவது இவர்களுக்கு எளிதாகிறதாம்.

மருத்துவ நிபுணர்களும் சரி, உளவியலாளர்களும், சுய இன்பம் குறித்து பொதுவாக கூறும் ஒரு ஆறுதலான விஷயம் – சுய இன்பப் பழக்கத்தால் பால்வினை நோய்கள் வராது, விந்தனு உற்பத்தி பாதிக்காது, பெண் பிறப்புறுப்பில் பாதிப்பு ஏற்படாது என்பதே.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்… அதை மனதில் வைத்துக் கொண்டு எதைச் செய்தாலும் சரிதான்!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"