பருவம் அடையும் பச்சைக் குழந்தைகள்!


சீன நாட்டில் பச்சைக் குழந்தைகள் பருவம் அடைந்து வருகின்றார்கள். இது Mini Puberty என்று சொல்லப்படுகின்றது. இந்நிலைமை Wuhan, Guangdong, Shandong, Anhui, Jiangxi and Beijing ஆகிய மாவட்டங்கள் அடங்கலாக நாடு பூராவும் காணப்படுகின்றது.

அதிகரித்து வரும் பால் மாவு உபயோகமே இதற்குக் காரணம் என்று கருத்துக்கள் நிலவுகிறது . பால் மாவு பாலியல் சுரப்பிகளைத் தூண்டி விடுகின்றதாம். ஆனால் அந்நாட்டு சுகாதார அமைச்சு இம்மாதிரியான கதைகளை அடியோடு நிராகரித்து உள்ளது.

மேற்சொன்ன நிலைமை பிறந்து ஆறு மாதங்களுக்கு உள்ளாக ஆண் குழந்தைகளுக்கும், இரண்டு வருடங்களுக்கு உள்ளாக பெண் குழந்தைகளுக்கும் ஏற்பட்டு விடுகின்றது. ஆனால் இரண்டு வயதுக்கு பின் குழந்தைகளின் நிலைமை சரியாகி விடும் என்று சில நிபுணர்கள் சொல்கின்றனர்.

இந்நிலைமைக்கு சிகிச்சை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"