யார் இந்த தமிழ்காரன்?


"உலகத்தில் உனக்கென யாருமே இல்லாமல் இருக்கலாம், ஆனால் யாரோ ஒருவருக்கு  நீயே'  உலகமாய் இருக்கலாம்" என்ற யாரோ ஒருவருடைய சிந்தனையில் உதித்த..என்னுடைய மின் அஞ்சலை அலங்கரிக்கின்ற வரிகளுடன் ..உங்களை குழப்ப வரும் தமிழ்காரன்..

இந்த பதிவுகள் ஒரு சுயத் தம்பட்டமாக, தகர டப்பாவினை இசைக்கும் தமிழ்காரனின் இசையாக அமையலாம்?

எல்லோருக்கும் புகழ்ச்சி பிடிக்கும்..ஆனால் அடுத்தவர்களுக்கும் புகழ்ச்சி பிடிக்கும் என்பது தெரிய வந்த போது வந்த மகிழ்ச்சி பிடித்தது...

இதையும் நீங்கள் வாசித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்ற குருட்டு நம்பிக்கையில்,காப்பி செய்யப்பட்ட வரிகளாக நீங்கள் நினைத்தாலும்..இதில் உள்ள எழுத்துக்கள் உங்களை வசியப்படுத்தினால் காப்பி செய்யும் உரிமை உங்களுக்கும் உண்டு...

உங்கள் கைகளில் நிரம்பி இருந்த!! உங்களால் கவனம் இல்லாமல் சிதறடிக்கப்பட்ட..பொறுப்பான பருப்பாக இந்த தமிழ்காரன் இருக்கலாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"