இணைய இணைப்பில்லாமல் விக்கிபீடியாவினை பயன்படுத்தலாம்


டெல்பி என்கிற அமைப்பு இந்த விக்கி டாக்ஸி என்ற மென்பொருளை அமைத்துள்ளது.இந்த மென்பொருளை தரவிறக்கி ஜிப் கோப்பை அன்-ஜிப் செய்து கொள்ளவும்.அதில் உள்ள WikiTaxi.exe என்ற கோப்பை திறந்தால் இது தகவல்கள் இல்லாத வெறும் இயக்கியாக தான் முதலில் காட்சித் தரும்.

பின்னர் "http://dumps.wikimedia.org/simplewiki/latest/" என்ற பக்கத்தில் சென்று தேவையான கோப்புக்களை தரவிறக்கிக் கொள்ளுங்கள். இது ஒரு தரவுத் தளம்[database] இது தரவிறங்க நேரம் பிடிக்கும்.

அடுத்து  WikiTaxi_Importer என்ற ஐகானின் மூலம் ஏற்றுமதிப் பெட்டி வரும் அதில் தரவிறக்கிய தரவு தளத்தின் முகவரியைக் கொடுத்து செலுத்தவும். ஏற்கனவே நீங்கள் தரவிறக்கிய கோப்பென்றால் அதன் எக்ஸ்டன்சன் .taxi என்று முடியுமாறு இருக்க வேண்டும்.

இதுவரை செய்தவற்றை ஒரு முறை செய்தாலே போதும். அடுத்து எப்போதெல்லாம் விக்கிப்பீடிய தேவையோ அப்போது WikiTaxi.exe என்ற கோப்பை திறந்து பயன்படுத்தத் தொடங்கலாம். இனி நீங்கள் விரும்பிய சொற்களை தேடலின் உதவியுடன் தேடிக்கொள்ளலாம். முடிந்த அளவு இணைய தேடலுக்கு இணையான தரத்தைத் தரும்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

மேலும் தகவல்களுக்கு...
http://www.wikitaxi.org/delphi/doku.php/products/wikitaxi/index

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"