பாலியல் வேட்கையை அதிகரிக்கும் வழிமுறைகள்


பாலியல் என்பது உயிரினங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் இனப் பெருக்கத்தின் ஆதாரம். பாலியல் என்பது அருவருக்கத்தக்க விடயமோ வேண்டத்தகாத விடயமோ அல்ல. பாலியல் என்பது ஆபாச விடயமும் அல்ல.

மனித இனப்பெருக்கத்துக்கும் மனிதனின் உடல், உள தேவைகளுக்கும் பாலியல் செயற்பாடுகள் அவசியமாகின்றது. அனுமதிக்கப்பட்ட அல்லது சட்டரீதியான அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட துணையுடன் பாலியலில் ஈடுபடுவது ஒருவரை அமைதிப்படுத்தும் புத்துணர்ச்சியை தரும்.

ஆனால், ஏனைய உயிரினங்கள் போன்று பாலியல் சார்ந்த விடயங்களில் மனிதன் அநாகரிகமாகவோ முறைதவறியோ நடக்கும் போதே பல்வேறு பிரச்சினைகள் தோன்றுகின்றன.

பாலியல் என்பது விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒரு விடயமாகும். பாலியல் தொடர்பில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்தக் கட்டுரையின் நோக்கம் பாலியல் செயற்பாட்டைத் தூண்டும் மருந்து வகைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களை அறிவுறுத்துவதாகும்.

இயற்கை உணவின் மூலமாக பாலியல் ஆற்றலை அதிகரிப்பது தொடர்பாக விழிப்பூட்டுவதாகும். பாலியல் ஒரு கலை. இந்தக் கலையில் எல்லோரும் முழுமையாக வெற்றி பெறுவதில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

பாலியல் குறைபாடு என்பது அதில் ஒரு முக்கிய ஒரு விடயமாகும். சிலர் இயற்கையாகவே பாலியல் குறைபாடுடையவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் நோய்கள் காரணமாக குறைபாடுடையவர்களாகவும் ஆர்வம் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

இன்னும் சிலர் உளவியல் சார்ந்த பாதிப்புக்கள் காரணமாக பாலியலில் ஈடுபட முடியாதவர்களாகவும் அல்லது பூரண திருப்தி பெற முடியாதவர்களாகவும் அல்லது ஆர்வமற்றவர்களாகவும் இருக்கலாம்.

இன்னும் சிலர் பாலியல் தொடர்பான அச்சம் காரணமாகவும் ஏற்கனவே பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களுக்கு அல்லது பாதிப்புக்களுக்கு உள்ளானவர்களாகவும் இருப்பதன் காரணமாக தனது பங்காளியுடன் (துணையுடன்) இவ்விடயத்தில் ஒத்துழைப்பு வழங்க முடியாதவர்களாக இருக்கலாம். அல்லது விருப்பமற்று இருக்கலாம்.

இன்னும் சிலர் ஓரினச் சேர்க்கைக்கு அடிமையாகியுள்ளதன் காரணமாக கணவன் மனைவிக்கிடையில் தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைந்தவர்களாகக் காணப்படலாம். இன்னும் இது போன்ற பல காரணங்களை குறிப்பிடலாம்.

எது எப்படி இருந்த போதிலும் பாலியல் செயல்பாட்டை தூண்டும் மருந்து வகைகளை உட்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடைகளிலும் பார்மஸிகளிலும் தனிப்பட்ட முறையிலும் பாலியல் செயற்பாடுகளை அதிகரிக்கக் கூடிய மருந்து மாத்திரை வகைகள் லேகியங்கள் இரகசியமாகவும் பரகசியமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஏன் ஊடகங்களில் கூட இது தொடர்பாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுகாதார அமைச்சு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாலியல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் என விளம்பரப்படுத்தப்பட்டு பல்வேறு பெயர்களில் மாத்திரைகள் மற்றும் அவற்றுடன் தொடர்பான மருந்துகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் வாசனைத் திரவியம் மற்றும் ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான 500ற்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் ஆறு வகையான மருந்துப் பொருட்களே அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒளடத ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே, பாலியல் செயற்பாட்டைத் தூண்டும் மருந்து வகைகளை உட்கொள்ளுவதில் அவதானம் அவசியம் என்று சுகாதார அமைச்சு குறிப்பிடுகிறது.

பாலியல் செயற்பாட்டைத் தூண்டும் மருந்துகளால் மனச்சோர்வு, வாந்தி, குருதி அமுக்கம், மாரடைப்பு, நரம்புக் கோளாறுகள், வலிகுணங்குறிகள், நிறைகுறைவு, வயிற்றுவலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படுத்தப்படுவதாகவும் இவ்வகை மருந்துகளை உட்கொள்ளுமுன் வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்தியுள்ளது.

பாலியல் பிரச்சினைகள் காரணமாக கணவன் மனைவிக்கிடையில் பிளவுகள் ஏற்படுகின்றன. குடும்பப் பிரச்சினை ஏற்படுகின்றன. ஏன் முறையற்ற தொடர்புகளும் ஏற்படுகின்றன.

சிலர் இப் பிரச்சினை தொடர்பில் வெளியில் சொல்ல முடியாதவர்களாகவும் ஆலோசனை பெற தயங்குபவர்களாகவும் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் சிலர் சந்தையில் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்துகின்றார்கள்.

இன்னும், சிலர் நீண்ட நேரம் சுகம் அனுபவிக்க வேண்டும். அல்லது பாலியல் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற நோக்கங்கள் காரணமாக பாலியல் மருந்து வகைகளை பயன்படுத்த ஆரம்பித்து பின்னர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.

தங்கபஸ்பம், வயகரா மாத்திரை, சிட்டுக்குருவி லேகியம், மதனலேகியம், ஸ்ப்ரே (KffPmO) வகைகள் மாத்திரை வகைகள், கிரீம் வகைகள் என பல்வேறு மருந்து மாத்திரைகள் சந்தையில் விற்பனையில் உள்ளன தொலைபேசி அல்லது நேரில் சந்தித்து ஆலோசனை பெற்ற பின்னர் தபால் மூலமாக லேகியம் மற்றும் மருந்து வகைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்படுகின்றன.

இவை எல்லாம் எந்தளவு வெற்றியளித்துள்ளன? பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றனவா? உண்மையா? பொய்யா? என்பது பற்றி அந்த மருந்து வகைகளை பயன்படுத்தியவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.

இந்நிலையில், சுகாதார அமைச்சு எச்சரித்துள்ள விடயம் தொடர்பாகவும் கவனம் எடுப்பது நல்லது.

பாலியல் ஆற்றலை அதிகரிக்க இயற்கை மருந்துகளும் உணவு வகைகளும்

பாலியல் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள செயற்கையான மருந்து வகைகளை நாடாமல் இயற்கையான மருந்துகளையும் உணவு வகைகளையும் பயன்படுத்துவதே நன்று.

உணவுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா? விஞ்ஞானத்தின் பதில் ஆமாம் என்பது தான் ஊருக்கு அல்லத நாட்டுக்கு ஏற்றபடி காதல் உணர்வுகள் மாறுகின்றன.

ஒட்டகத்தின் திமில் அரேபியர்களுக்கும், குங்குமப் பூ ஸ்பெயின் நாட்டவர்களுக்கும், கோகோ அஸ்டெக் இனத்தவர்களுக்கும், பறவை கூடு சூப் சீனர்களுக்கும் ஆண்மையை அதிகரிக்கும் உணவாக கருதப்படுகின்றன.

* கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு ஆகியன ஆயுர் வேதத்தின் படி சுக்ல தாதுவின் தரத்தை உயர்த்தும், இவற்றால் தயாரிக்கும் இனிப்புகள் பாலுணர்வை ஊக்குவிக்கும்

* பாதாம் கொட்டை, பிஸ்தா, முந்திரி, வேர்கடலை போன்றன பாலுணர்வை அதிகரிக்கும்

* சாக்லேட் வேட்கையை பெருக்கும் பாலுறவு கிளர்ச்சியூட்டும்

* ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப் பூ, இலவங்கப்பட்டை இவைகள் ஆசையை அதிகரிக்கும் ஜாதிக்காய் விந்து முந்துதலை தடுக்கும்

* கிழங்குகள், கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கும். தக்காளி சிறந்த பலுணர்வு ஊக்கியாகும்.

* வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும்.

* பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம், கொய்யாப்பழம் இவைகள் இளமை காக்கும் பழங்களாகும்.

* கடல் மீன்களை விட நதி மீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவையாகும்.

* எருமைபால், தயிர் (பகலில்) , மோர், வெண்ணை நெய் இவை எல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகளாகும்.

* முருங்கைக் கீரை, முருங்கைப் பூ இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி வதக்கி பொரித்து அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து தூவி உணவுடன் சேர்த்துண்டால் ஆண்மை தன்மை அதிகரிக்கும் விறைப்பு நீடிக்கும்.

* முருங்கைப் பூ 10 சுத்தமான பசும்பாலில் சேர்த்து காய்ச்சி இரவு படுக்கும் போது குடித்து வந்தால் விந்து விருத்தியாகும். விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தாமல் இருக்கும்.

* முருங்கைப் பூவை உணவாகவோ மருந்துகளில் சேர்த்தோ பச்சையாகவே எந்தவிதத்தில் உபயோகப்படுத்தினாலும் அது உடலில் காமத்தை பெருக்கும். முருங்கையின் மகிமையை கே.பாக்கியராஜின் முந்தானை முடிச்ச படம் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம் படம் பார்த்தவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள். இயற்கை மருந்தை உண்டு இன்பமாக வாழ்வோம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"