பெண்களின் அந்தரங்க ரகசியத்தை வெளிப்படுத்தும் அங்க இலட்சணம்!

அங்க இலட்சணங்கள் ஒருவரின் குனாதிசியங்களின் வெளிப்பாட்டினைப் புலப்படுத்த வல்லன என்பதனை முன்னோர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.

இறைவனை பாதாதி கேசமாகவும் பெண்ணைக் கேசாதிபாதமாகவும் வர்ணிப்பதே இலக்கிய மரபு. ஆதலால் தலைமுடி தொட்டு பாதம்வரை பார்ப்பதே நெறியாகும்.

தலைமுடி :
-குதிரை வாலைப் போல மிருதுவாக இருந்தால் : இந்த நங்கை கணவனோடு வம்பாடுவதை விரும்புவாள்

-கொஞ்சம் நீல வண்ணத்துடன் இருந்தால் : கணவனைச் செல்வந்தனாக்கும் பண்பானவள்

-முடியில் முரட்டுத் தன்மை இருந்தால் : துன்பத்துக்கு ஆளாவாள்

-தலையில் முடி சுழிப்பட்டிருந்தால் : கணவனை இழப்பாள்

தலைப்பகுதி :
-தலை பெரிதாக இருந்தால் : துன்பம் வந்து சேரும்

-பின்பக்கம் எடுப்பாக உயர்ந்திருந்தால் : கணவனுக்கு ஆபத்து நேரலாம்

-தலை விசாலமாக இருந்தால் : ஆயுள் குறைவு நேரலாம்

காதுகள் :
-அதிக நீளமில்லாமல் சதைப்பிடிப்போடு இருந்தால் : செல்வம் வந்து சேரும்

-இரண்டு காதுகளும் அளவில் மாறுபட்டிருந்தால் : துன்பம் வந்து சேரும்

-பெண்களின் காதுகளில் முடி முளைப்பது : கணவனுக்கு நட்டத்தைக் கொடுக்கும் / கணவனோடு வம்பாடுதல்

தாடை :
-தாடைகளில் கருமை/ முடி படர்ந்திருப்பது : நல்லதல்ல

-கன்னங்களில் குழி விழுவது : செல்வத்தைக் கொடுக்கும்/ ஏமாளித்தனத்திற்கு இட்டுச் செல்லும் (எச்சரிக்கை)

நெற்றி :
-நெற்றி அகன்று இருந்தால் : கணவனுக்கும் மாமனாருக்கும் ஆபத்து விளைக்கும்

-நெற்றி பள்ளமாக இருந்தால் : மைத்துனனுக்கு ஆபத்தை விளைவிக்கும்

-நெற்றி பிறை நிலவு போல் இருந்தால் : செல்வம் சேரும்

-நெற்றியில் எள்ளைப் போல சிறு சிறு கருப்பு மச்சம் இருந்தால் : விரைவில் பிள்ளைப் பேறு அடைவார்

-நெற்றியில் சுழி இருந்தால் : கணவனை இழக்கச் செய்யும்

முகம் :
-முகம் பூரண சந்திரனைப் போல் இருப்பது : குடும்பத்திற்கு நல்லது

-தாமரை மலரைப் போல இருந்தால் : கணவனை மகிழ்விப்பாள்

-முகத்தில் கருமை படர்ந்திருந்தால் : துன்பத்தைக் கொண்டு வருவாள்

-கணவனின் முகம் போல ஒத்திருந்தால் – பாவ காரியங்கள் செய்யத் துணிவாள்

கண்புருவம்/ கண்கள் :
-கண்புருவம் வில்போல் வளைந்திருந்தால் : சிறப்பு அம்சம்

-கண்புருவம் சேர்ந்திருப்பது : துன்பம் தரும்

-புருவங்களில் சுழி இருப்பது : துன்பம் கொடுக்கும்

-கண்கள் பெரிதாக, அழகாக இருத்தல் : அழகு கொடுக்கும், (இலக்கியங்களும் இயம்புகிறது)

-பூனைக் கண்ணை போலிருத்தல் : முரட்டு குணம்/ சண்டையில் விருப்பம் இருக்கும்

-கண்கள் கோணலாக இருந்தால் : துன்பம் சேரும்

-கண்கள் குண்டு குண்டாக இருந்தால் : கணவனின் பெயரைக் கெடுப்பாள்

-முட்டைக் கண்/ தூங்கு மூஞ்சிப் பார்வையும் இருந்தால் : புகுந்த வீடு கெடும்

மூக்கு :
-மூக்கு நீண்டிருந்தால் : செல்வம்/ நீண்ட ஆயுள் அளிக்கும்

-குடை மிளகாய் போலிருந்தால் : துன்பத்தை அனுபவிப்பாள்

-பள்ளமாக இருந்தால் : கணவனுக்கு தீங்கு அளிப்பாள்

-மூக்கில் முடி முளைத்திருந்தால் : சண்டைக்காரியாக இருப்பாள்

நாக்கு :
-நாக்கு தடித்திருந்தால் : துன்பம் சேரும்

-சிறிதாக இருந்தால் : செல்வா வளம் பெருகும்

பற்கள் :
-அழகாக, எடுப்பாக, வரிசையாகவும் இருந்தால் : நன்மை பயக்கும்

-பற்களில் இடைவெளி காணப்பட்டால் : செல்வம் சேரும்/ சஞ்சலம் காணப்படும்

-பற்கள் உள்நோக்கி மடிந்திருந்தால் : தீமையைக் கொண்டு வரும்

-பற்கள் மேல் வரிசையில் குறைவாக இருந்தால் : தாய் வழி சொந்தத்திற்கு ஆபத்து/ துன்பம்

வாய் :
-வாய் பெரிதாக இருந்தால் : வாயாடியாகவும்/ வீட்டை விட்டு வெளியேற ஆர்வம் கொண்டவளாக இருப்பாள்

-வாய் சாம்பல் பூத்திருப்பது : துன்பத்தை சேர்க்கும்

-சிவந்து செம்மை படர்ந்திருப்பது : நன்மை பயக்கும்

உதடுகள் :
-கருமை படர்ந்திருப்பது : நல்லதல்ல

-பவளம் போல மிருதுவாக இருந்தால் : உத்தமியாக இருப்பாள்

-மேல்/கீழ் உதடுகளில் முடி முளைத்திருப்பது : நன்மை பயக்காது

-மேல் உதடு உயரமாக இருந்தால் : சண்டையில் விருப்பம் கொண்டவளாக இருப்பாள்

-கீழ் உதடு பெரியதாக இருந்தால் : துன்பம் வரும்

கழுத்து :
-கழுத்து குறுகி இருந்தால் : வறுமை வாழ்வு

-கழுத்து நீண்டு இருந்தால் : குடும்பத்துக்கு கேடு தரும்

-கழுத்து பெரியதாய் இருந்தால் : கோபக்காரி ஆவாள்/ ஏழ்மை

-சங்கு போன்ற கழுத்து இருந்தால் : பிறந்த, புகுந்த வீட்டிற்குப் புகழைத் தேடித் தருவாள்

-தாமரைப் போலிருந்தால் : கணவனை மதியாமல் நடப்பாள்

-கழுத்தில் மேலே சுழி இருந்தால் : துன்பம் பயக்கும்

-கழுத்தில் ரேகைகள் காணப்பட்டால் : நன்மைகள் அடைவாள்

-குரல் வளம் நன்றாக இருந்தால் : நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம் அடைவாள்

கைவிரல் :
-மென்மையாக இருந்தால் : செல்வா வளம் அடைவாள்

-அகன்று இருந்தால் : வேலைக் காரியாகப் பிழைப்பாள்

-சேர்ந்து இருந்தால் : துன்பப்படுவாள்

-பெருத்திருந்தால் : கணவனை இழப்பாள்

உள்ளங்கை :
-கொஞ்சம் பள்ளமாக இருந்தால் : செல்வம் சேரும்

-முக்கிய எகைகள் இருப்பது : நல்லது

-ரேகைகள் இல்லாமலும்/ அதிக ரேகைகள் இருப்பதும் : துன்பம் சேர்க்கும்

கைகள் :
-சமமாக இருந்தால் : செல்வம் சேரும்

-முழங்கை கோணலாக இருந்தால் : பிள்ளைப் பேறு கிடைக்காது

-மணிக்கட்டுகள் வெளியில் தெரியாமல் இருந்தால் : நல்ல கணவனையும் செல்வத்தையும் அடைவாள்

முதுகு :
-முதுகில் சதைப்பற்று இல்லாதிருந்தால் : கணவனுக்கு துன்பம் சேரும்

-முதுகில் முடி முளைத்திருந்தால் : மனப்போரட்டம் ஏற்படும்

தோள்கள் :
-தோள்கள் அகன்றிருந்தால் : நல்ல உடன் பிறப்பு/ நன்மை சேரும்

-தோள்கள் உயர்ந்திருந்தால் : உடன் பிறப்புகளுக்கு ஆபத்து வரும்

-முடி முளைத்திருந்தால் : துன்பத்தை எதிர்கொள்வாள்

மார்பகங்கள் (அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது) :

-பெரிதாக இருந்தால் : நன்மை பயக்கும்

-சிறுத்துப் போயிருந்தால் : செல்வந்தன் மகளாக இருப்பினும் ஊர் ஏழையை மணமுடிக்க நேரிடும்

-ஒன்று பெரிதும் மற்றொன்று சிறிதாக காணப்பட்டால் : பாதி வாழ்வு சிறப்பாகவும் மீதி வாழ்வு துன்பமாகவும் காணப்படும்

கொப்பூள் (தொப்புள்) :

-தொப்புள் மீது முடி இருந்தால் : செல்வத்தை அடைவாள்

-தொப்புள் உள்ளே முடி இருந்தால் : தீமைக்கு வழி வகுக்கும்

வயிறு :
-வயிற்றில் முடி இல்லாமை : செல்வம் சேர்க்கும்

-பெரிதாக இருந்தால் : பிடிவாத குணம் இருக்கும்/ வாழ்வில் சில இழப்புகள் நேரிடும்

-தொங்கிக் கொண்டிருந்தாள் : மாமனாருக்கு ஆபத்து ஏற்படும்

இடுப்பு :
-சிறிதாக இருத்தல் : நன்மை பயக்கும் (சங்க இலக்கியம்)

-பெரிதாக இருந்தால் : நேர்மாறாக இருக்கும்

பெண்குறி :
(பெண்மை இலக்கணத்தில் பொதுவாக கண்கள்,மார்பகங்கள்,பெண்குறி ஆகியவன பெரிதாக இருக்க வேண்டும் என்பது சாமுத்திரிகா இலட்சணம்)

-பெண்குறி வலப்புறம் உயர்ந்திருந்தால் : ஆண் குழந்தை அதிகமாகப் பிறக்கும்

-பெண்குறி இடப்புறம் உயர்ந்திருந்தால் : பெண் குழந்தை அதிகமாகப் பிறக்கும்

-சமமாக இருந்தால் : குழந்தை மாறி மாறி பிறக்கும்

தொடை :
-வாழைத்தண்டு போல இருத்தல் : சிறப்பு

-முடியில்லாமல் இருத்தல் : நன்மை பயக்கும்

-தொடை குண்டாக இருந்தால் : கணவனுக்குத் துன்பம் பயக்கும்

-தொடைகள் உறைந்துக் கொண்டிருந்தாள் : புகுந்த வீட்டிற்கு ஆகாது

கால் :
-காலில் கண்டச் சதை பெருத்திருப்பது : துன்பம் பயக்கும்

-பூமி அதிரும் படி நடப்பது : நல்லதல்ல

-கால் பூமியின் மீது பதியாவிட்டால் : துன்பமான வாழ்வு தழுவும்

-கணுக்கால் சமமாக இருந்தால் : செல்வ வாழ்வு சேரும்

-முடி முளைத்திருந்தால் : துன்பம் வந்து சேரும்

-பாதங்கள் சிறியவையாக இருந்தால் : செல்வ நிலை குன்றும்

-புறங்கால் ஆமை முதுகைபோல உயர்ந்திருந்தால் : கோயில் வழிப்பாட்டில் ஈடுபாடு

-நிற்கும் போது இடதுகால் பூமியில் ஊன்றியும், வலது கால் பூமியில் பட்டும் படாமல் இருந்தால் : தீர்க்க சுமங்கலியாக மடிவாள்

-நிற்கும் போது வலது கால் பூமியில் ஊன்றியும், இடது கால் பூமியில் பட்டும் படாமல் இருந்தால் : கணவனை இழப்பாள்

கால் விரல் :
-ஒரே சீராக இல்லாமல் கோணலாகவும், அதிக இடைவெளியாக இருந்தால் : பிள்ளைப் பேறு இருக்காது

-இடைவெளி இல்லாமல் ஒன்றுகொன்று நீண்டிருந்தால் : பொல்லாத பெண்ணாக இருப்பால்

-கட்டை விரலும் அதற்கு பக்கத்து விரலும் சமமாக இருந்தால் : நீண்ட ஆயுள்/ சுமங்கலி வாழ்வு

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"