இணையதள பக்கத்தின் வேகத்தை அதிகரிக்க எளிய வழி

 • உங்கள் தளத்தில் உள்ள படத்தின் அளவை குறைக்கவும். வாசகர்கள் தேவையென்றால் பெரிது படுத்தி பார்த்து கொள்வார்கள்.


 • உங்கள் தளத்தில் ஏதேனும் Flashல் உருவான விட்ஜெட் இருந்தால் நீக்கி விடவும். இது லோடு ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும்.


 • முடிந்த வரையில் பிலாக்கரின் default விட்ஜெட்டுகளை மட்டுமே பயன் படுத்துவது சிறந்தது.


 • உங்களுடைய தளத்தில் உள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் நீக்கி விடுங்கள். தேவையென்றால் புதியதாக சேர்த்து கொள்ளவும்.


 • உங்கள் தளத்தில் தேவையற்ற தற்போது உபயோகிக்காத விட்ஜெட்டுகளை கண்டறிந்து நீக்கி விடவும்.


 • உங்களுடைய முகப்பு பக்கத்தில் முழு பதிவும் தெரிவதற்கு பதில் ஒரு READMORE என்ற லிங்க் கொடுக்கலாம்.


 • மேலே உள்ள மாற்றங்கள் செய்த பிறகும் உங்கள் தளம் மெதுவாக தான் இயங்குகிறதா.

  எந்த விட்ஜெட் லோடு ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று அறியமுடியவில்லையா கவலையை விடுங்கள் உங்களுக்கு ஒரு தளம் உள்ளது.


  இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் காலி கட்டத்தில் உங்களுடைய தளத்தின் URL கொடுக்கவும்.பிறகு அதற்கு அருகே உள்ள Test Now என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய தளம் உங்களுடைய தளம் ஸ்கேன் ஆகும்.

  இணையத்தள முகவரி : http://tools.pingdom.com/fpt/

  இந்த வேலையை செய்வதற்கு இன்னொரு தளமும் உள்ளது. அந்த தளத்திருக்கு சென்றால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.


  இதில் உங்களுடைய தளத்தின் முகவரி கொடுத்து அருகில் உள்ள START TEST என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

  கிளிக் செய்தவுடன் உங்கள் தளம் ஸ்கேன் ஆகி உங்களுக்கு முடிவுகள் வரும். இதில் எந்தெந்த பகுதிகள் எவ்வளவுநேரம் எடுத்து கொண்டது என்ற செய்திகள் முடிவுகள் வரும் இதன் படி நம் தளங்களை மாற்றி அமைத்து கொள்ளலாம்.

  இணையத்தள முகவரி : http://www.webpagetest.org/

  பதிவுகளை மின்னஞ்சலில் பெற

  "Visits from 182 countries registered"