காதல் திருமணம் செய்துகொண்டால் சொத்துரிமை பறிபோகுமா?


ஒரு பெண், ஒருவரைக் காதலித்து அவரையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ள‍னர். ஆனால் அவர்கள் இருவரும் வெவ்வேறு பிரிவுகளைச்சேர்ந்தவர்களாக இருப்பின் அவர்கள் முன் யோசனையாக சட்ட ஆலோசனைகள் தேவைப்படும் அல்ல‍வா? அவர்களது காதல் திரு மணத்தின் காரணமாக பிற்காலத்தில் அவர்க ளுக்கு ஏதும் பிரச்னைகள் வராமல் தவிர்க்க… எந்த முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம்? இரு தரப்பு சொத்து பங்கீடுகள் தட்டிப் போக வாய்ப்பு உண்டா? சட்டப்பூர்வ திருமண பதிவுக்கு அந்த பெண் மேற்கொண்டாக வேண்டிய நடவடிக்கை கள் என்னென்ன? இருதரப்பு உறவுகளால் பிரச்னைகள் வந்தால் அடைக்கலம் மற்றும் பாதுகாப்புக்கு யாரை அணுகலாம்?

”இருவருமே இந்துக்கள் எனில், இந்து திருமணச் சட்டத்தின்கீழ் கோயில் அல்ல து மத வழக்கப்படி எங்கு வேண்டுமா னாலும் திருமணத்தை மேற்கொள்ள லாம். இருவருமே கிறிஸ்தவர் அல்லது ஒருவர் மட்டுமே கிறிஸ்தவர் எனில், கிறிஸ்தவ சட்டத்தின்படி பதிவாளர் அந்த ஸ்திலிருக்கும் பங்குத் தந்தை இருக்கும் தேவால யத்தில் திருமணம் செய்து கொள்ளமுடியும். இருவருமே இஸ்லா மியர் எனில் , குறைந்தது 2 சாட்சிகளுடன்கூடிய ஒரு ஒப்பந்தம் போதும். இடம் முக்கிய மல்ல.

இந்த மூன்று மத திருமணச் சட்டங்கள் தவிர்த்து, தமிழகத்தில் சுய மரியாதை திருமணச் சட்டத்தின் கீழும் திருமணம் செய்து கொள்ள முடியும். பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள், ஒரு அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் என எவர் முன்னிலையிலு ம் தாலி, மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகளுடனோ அல்லது அவை இன்றியோ திருமணம் செய்யமுடியும்.

எந்தவொரு சாதி, மதம் உள்ளிட்ட சமூகப் பிரிவுகளை பொருட்ப டுத்தாது, சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி திருமணப் பதிவாளர் முன்னிலையில் திருமண அங்கீகாரத் துக்கு வழி செய்யும் சிறப் புத் திருமணச் சட்டமும் இருக்கிறது.

காதலிக்கும் இருவரும் இருவேறு பிரிவுக ளாக அதாவது இருவேறு சாதிகளைக்காரர் களாகவோ அல்ல‍து மதக்காரர் களாகவோ இருந்தால், அவர் மேற்கண்ட திருமணச் சட்டங்களில் உங்களுக்கு உகந்ததை தேர்வு செய்து கொள்ளலாம். இவர்களது திருமண த்திற்கு சட்ட‍ம் தடையாக இருக்காது. மதமோ ஜாதியோ அவை சட்டத்தின் கீழ் அவை ஒரு பொருட்டில்லை.

சொத்துரிமை
ஒருவருடைய சொத்துக்கள் சுயமாக சம்பாதித்தவை எனில், அவ ராக யாருக்கு வேண்டுமானாலும் அதை எழுதி வைக்க முடியும். சுய சொத்தாக இருந்தும் உயில் ஏதும் எழுதி வைக்காமல், அதன் உரிமை யாளர் இறந்து போனால்… சட்டப் பூர்வமான வாரிசுகள் அனைவருக் குமே உரிய பங்கீடு பெற உரிமை தானாகவே வந்து விடும். பூர்வீக சொத்தாக இருக்கும் பட்சத்தில்… வாரிசுகள் அனை வருக்குமே உரிய பங்கு உண்டு. காதல் திருமணம் மட்டுமல்ல, வேறு எந்தவிதமான காரணத் தைக் காட்டி யும் அதை மறுக்க முடியாது. அப்படி மறுக்கும் பட்சத்தில் சட்டத் தின் உதவியோடு உரிய பங்கை மீட்கமுடியும். சட்டப்பூர்வமான வாரிசுகள் என்பதில் ஆண் , பெண் பேதம் கிடை யாது.

திருமண பதிவு சட்ட‍ம்
தமிழ்நாடு கட்டாய திருமண பதிவுச் சட்டம் கைகொடுக்கும். இதன் படி எந்த வகை திருமணம் என்றபோதிலும், சட்டப் படி பதிவு செய்து கொள்வது 2009 நவம்ப ரிலிருந்து கட்டாயம் செய்யப் பட்டு ள்ளது. திருமணமான 90 நாட்களில் இதை மேற் கொண்டாக வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், மேற்கொண்டு அபராத கட்டணத் தோடு அடுத்த 60 நாட்களில் கட்டாயமாக பதிவு செய் தாக வேண்டும்.

சட்டப்பூர்வமான திருமணம் என்பதன்கீழ் வயதுத்தகுதி ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18 நிறைவு பெற்றி ருக்க வேண்டும். ரத்த சகோதர உறவு இருக்கக் கூடாது. ஏற்கெனவே திரு மணம் ஆகி இருக்க க்கூடாது. இந்த நிபந்தனைகள் எல்லாம் சரியாக இருக்கும்பட்சத் தில் ஒரு ஜோடியின் திருமணத்துக்கு சட்டப் பூர்வ அங்கீகா ரம் கிடைத்து விடும்.

காதல் திருமணத்துக்குப் பிறகு பிரச்னைகள் வந்தால்…
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். அவர் கள் பேச்சுவார்த்தை, கவுன்ச லிங் என சுமூக தீர்வுகளுக்கு வழி செய்வார்கள். எல்லை மீறிய அச்சுறுத்தல் மற்றும் தொந்தரவு கள் வந்தால் ‘பெண் களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுப்பு சட்ட த்தின் கீழ் உங்களை பாது காத்துக் கொள்ள முடியும். மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இதற் கென இருக்கும் பாதுகாப்பு அலுவலரை அணுகி முறையீடு செய்யலாம். இதே கோரிக்கையோடு மாவட்ட ஆட்சித் தலைவரையும் அணுகலாம். உரிய பாதுகாப்பு கிடைக்கும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"