குளிப்பதைப் செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது!


பழனி அருகே தனது வீட்டுக்கு வெளியே மறைவிடத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆசிரியையை செல்போனில் படம் பிடித்ததாக வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சந்தியா. 21 வயதான இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துப் பணிக்காக காத்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டின் முன்புறம் உள்ள குளியலறையில் அவர் குளித்துக் கொண்டிருந்தார்.

அந்த குளியலறையானது குடிசை ஓலையால் ஆனதாகும். மேற்கூரை கிடைாயது. இதைப் பயன்படுத்தி அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்றவாலிபர் ஓலை இடைவெளி வழியாக தனது செல்போன் மூலம் வீடியோவில் எடுத்தார்.

இதை சந்தியா பார்த்து விட்டு அலறினார். உடனடியாகஅக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். மணிகண்டன் அவர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டு தர்ம அடி வாங்கினார். அவரை போலீஸாரிடம் மக்கள் ஒப்படைத்தனர். ஆயக்குடி போலஸீார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"