மாணவியை கற்பழித்து ஆபாச படம் எடுத்த பக்கத்து வீட்டுக்காரன் !!


புதுவையில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவி மிதுலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாயார் இறந்துவிட்டார். தந்தை சென்னையில் உள்ளார். இதனால் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்றுவந்தார். இவருடைய மாமா பழனி என்பவரது வீடு அரியாங்குப்பத்தில் உள்ளது.

பள்ளிக்கு விடுமுறை என்பதால் மாமா வீட்டுக்கு சென்று தங்கினார். இந்த நிலையில் மிதுலா புதுவைக்கு வந்து விட்டு அரியாங்குப்பம் செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். நீண்ட நேரமாக பஸ் வரவில்லை. அப்போது அரியாங்குப்பத்தில் மாமா வீட்டு அருகே வசித்து வந்த குமரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது, வயது 21) அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை பார்த்ததும் மிதுலா நான் நீண்டநேரமாக பஸ்சுக்கு காத்திருக்கிறேன். எனவே அரியாங்குப்பத்தில் கொண்டு விடுங்கள் என்று கூறினார்.

குமரன், மிதுலாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அரியாங்குப்பம் சென்றார். வழியில் நோனாங்குப்பம் படகுதுறைக்கு சென்று வரலாம் என்று கூறி அழைத்து சென்றார். அங்குள்ள காட்டுப்பகுதிக்கு ஏமாற்றி அழைத்து சென்று மிதுலாவை கற்பழித்தார்.

மேலும் ஆபாச படம் எடுத்ததாக தெரிகிறது. அவர் ஆபாச படத்தை தனது நண்பர்களிடமும் காட்டினார். அதை பார்த்த நண்பர்கள் மிதுலாவை அழைத்து வா, நாங்களும் அவருடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் குமரன், மிதுலாவை சந்தித்து தன்னுடன் வந்து நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கும்படி அழைத்தார்.

ஆனால் மிதுலா ஏற்க மறுத்துவிட்டார். எனவே குமரன் தன்னிடம் இருக்கும் ஆபாச படத்தை வெளியிட்டு விடுவதாக மிதுலாவை மிரட்டினார். இதுபற்றி மிதுலா தனது அத்தை ராணியிடம் கூறினார். அவர் திராவிடர் விடுதலை கழக பிரமுகர் லோகு. அய்யப்பனிடம் நடந்த விஷயங்களை கூறினார்.

இதையடுத்து மிதுலாவின் உறவினர்கள் மற்றும், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு மிதுலாவை அழைத்து வந்தனர். போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். குமரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி புகார் கொடுத்துள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"