காதல் செய்ய தெரிந்து கொள்ள வேண்டிய பத்து விஷயங்கள்!


காதல் என்ற மந்திர சொல்லில் விழுந்திராதவரே இருக்க வாய்ப்பில்லை. காதலில் வெற்றியோ, தோல்வியோ, ஆனால் அதை ஒரு முறையாவது நாம் கடந்து சென்றிருப்போம். பல பேர் காதலில் தோற்று விடுவர். சிலர் வெற்றி பெற்று திருமணம் வரை சென்று பின் அதில் தோல்வி அடைவார்கள். காதலில் வெற்றி பெற்று, அது திருமண பந்தமாக மாறும் போது, அதிலும் வெற்றி பெற்றவர்கள் எத்தனை பேர்?

காதல் என்பது ஒரு தனித்தன்மையான உணர்ச்சி. இந்த உணர்வை அனுபவித்தவர்களுக்கு தான் சொல்வது புரியும். இன்னும் காதலில் விழாதவர்கள் இந்த உணர்வு எப்படியிருக்கும் என்று அறிய ஏங்குவாகள். காதலிக்கும் பெரும்பான்மையினர் அவர்களின் காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக உள்ளனர். ஆனால் சிலருக்கோ காதல் வாழ்க்கை கசந்து விடுகிறது. பல நேரம் காதலில் சிக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கலாம் என்று எண்ணத் தொடங்கி விடுவார்கள். காதலில் விழுந்த பின் அதை நினைத்து வருந்தும்படி ஆகி விடக் கூடாது. எனவே காதலில் விழுவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பத்து விஷயங்கள் உள்ளன.

நட்பு
எந்த ஒரு உறவு முறையானாலும், அதில் நட்பு சிறிதளவாவது இல்லாமல் இருப்பதில்லை. அப்படியிருக்கும் போது ஏன் காதல் ஆரம்பிக்க, நட்பு முதல் படியாக அமையக் கூடாது? ஆம், காதலுக்கு முதல் படி நட்பு தான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். அதனால் புத்திசாலித்தனமாக நட்பை தேர்ந்தெடுங்கள்.

மோகம் கூடாது
காதலில் விழுவது வெறும் மோகத்தினால் தான் என்பது பலரின் கருத்து. மோக உணர்வை பெற்று அந்த உணர்வோடு வாழ விரும்பவே காதலில் விழுகின்றனர் என்பதும் இவர்களின் எண்ணமாகும். மோகத்தினால் ஒரு காதல் உணர்வை வளர்த்தால், அது சீக்கிரமே வளரத் தொடங்கி விடும். ஆனால் அந்த வேகத்திலேயே நம்மை விட்டும் நீங்கியும் விடும். அதனால் காதலுக்கும் மோகத்துக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்.

நம்பிக்கை
நம்பிக்கை தான் எந்த ஒரு உறவுக்கும் அடிப்படை தேவைப்பாடு. காதலில் இந்த நம்பிக்கை மற்ற அனைத்தையும் விட முக்கியமானவை. அதனால் காதலிக்கும் இருவருமே ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைப்பது மிகவும் அவசியம். அப்படியிருந்தால் தான் அந்த உறவும் என்றுமே நீடிக்கும். ஆனால் மனம் விரும்பியவர் மீது நம்பிக்கை வைக்க தவறினாலோ அல்லது அவர்களை சந்தேகப்பட்டாலோ, உணர்வு ரீதியாக அவர்களிடம் பிணைப்பில் இருக்க வேண்டாம். ஏனென்றால் ஒருவேளை பிரிவு ஏற்பட்டால் அதனை தாங்கும் சக்தி இருக்காது.

உணர்தல்
சந்தர்ப்பத்தால் ஏற்படும் காதலையோ, விருப்பத்தினால் ஏற்படும் காதலையோ முன்கூட்டியே கணிக்க முடியாது. ஏனென்றால் காதலிப்பவர் மீது அளவுக் கடந்த தனித்தன்மையான விருப்பம் இருக்கும். நாளாக நாளாக இந்த உறவு வலுப்பெரும் போது, நட்பையும் விட பெரியது என்றும், காமத்தை விட சிறந்தது என்றும் உணர்ந்து கொள்வோம். அப்போது இந்த உறவு வெறும் சந்தர்ப்பத்தாலோ அல்லது விருப்பத்தாலோ வந்தது அல்ல என்று புரிந்து கொள்வதோடு, உறவும் நீடித்து நிற்கும்.

துணையின் உணர்வை மதித்தல்
வெறும் நண்பர்களாக இருக்கும் போது, தனி மனிதராக அதிக அளவில் சுதந்திரம் இருக்கும். ஆனால் காதலில் விழுந்த பின் காதலிப்பவரின் உணர்வை மதிக்க வேண்டிய பொறுப்பு சுமை மேல் விழும். காதலிப்பவரை மிகவும் அன்போடும், பகுத்தறிவோடும் கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம். அனுசரணையோடும், அன்போடும் உங்கள் காதலியை/காதலனை நடக்க தெரியாவிட்டால், இந்த காதல் உங்களுக்கு சுமையாகவே இருக்கும்.

நன்கு புரிதல்
ஒரு காதல் அவ்வளவு சுலபமாக சாவதில்லை. என்றும் முடியா செய்கையான அது முதிர்ச்சி பெற பல காலாமாகும். சில குணங்களை கண்டோ அல்லது செயல் திறனை கண்டோ காதலில் விழுவோம். இருவரின் தனிமனிதப் பண்பும் ஒத்துப் போய், மெதுவாக காதல் வலுவடைந்து நிற்கும்.

எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளுதல்
உணர்வு ரீதியாக உண்டாகும் பந்தம் மிகவும் ஆழமாக வேரூன்றும் போது, காதல் வளரத் தொடங்கும். காதல் துளிர் விடும் போது பெரும்பாலான நேரத்தை காதலிப்பவரோடே செலவு செய்வோம். அப்படிப்பட்ட நேரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல நேரத்தில் இது காதலில் நடக்க வாய்ப்பு உள்ளது. இது ஏற்பட முக்கிய காரணம் எதிர்பார்ப்பும், அதிக அளவு பற்றுதலே காரணம்.

காதல் என்பதற்கான அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல்
பல பேருக்கு உடல் உறவு கொள்வதற்கு சுலபமான வழி காதல் என்ற எண்ணம் உள்ளது. இது தவறான எண்ணம். காதலில் விழுவது என்பது தூய்மையான உணர்வு மற்றும் அன்பை பரிமாறுதல் ஆகும். இது உடல் உறவு கொள்வதற்கான கருவி கிடையாது. ஆனால் உடல் உறவு கொள்வது இந்த உறவின் ஒரு பகுதியே என்பதை மறுக்கவும் இல்லை. அதனால் காதல் என்பது உடலைச் சார்ந்ததே என்ற எண்ணத்தை முதலில் கை விடுங்கள்.

நேரத்தை செலவழித்தல்
ஒரு நண்பராக உங்கள் நண்பர்களுக்கென்று நேரத்தை செலவிட முடியாமல் போகலாம். ஆனால் காதலிப்பவருக்கு கண்டிப்பாக நேரத்தை செலவிட வேண்டும். எவ்வளவு சிக்கலான வேலையில் ஈடுபட்டிருந்தாலும், காதல் துணையோடு நேரத்தை செலவழிப்பதை மறந்து விடக்கூடாது. அப்படி செய்தால் தான், காதல் எந்த ஒரு பிரச்சனையுமின்றி வாழும். நேரம் என்பது ஒரு பெண்ணை பொறுத்த மட்டில் காதல், பக்தி மற்றும் உணர்ச்சி. எவ்வளவுக்கு அதிகம் நேரத்தை அவர்களுக்காக செலவு செய்கிறீர்களோ, அவ்வளவுக்கு அதிகம் காதல் ஆழாமாகும்.

காதல் வலி
காதலில், வலி என்பதற்கும் முக்கிய பங்கு உண்டு. காதலிக்கும் போது, அதை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். காதலில் வலியை பல நேரங்களில் அனுபவிக்க முற்படுவோம். ஆனால் உண்மையான காதல், வலி மற்றும் கஷ்டங்களால் தான் வலுவாக வளரும். இந்த நேரங்களில், காதலன்/காதலி உங்களுக்கு தோள் கொடுப்பார்கள். ஆனால் இதற்கு நேர் மாறாக, அவர்கள் உங்களோடு கை கோர்ப்பதற்கு தயங்கும் போது, இந்த உறவை முடித்து கொள்வதே நல்லது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"