சூரிய மின் சக்தி உற்பத்தி தொழில்நுட்பப் படிப்புகள்


சென்னை கிண்டி ஐ.டி.ஐ. கட்டட வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மைய இணை இயக்குநர் ஜெயச்சந்திரன் கூறும்போது, 'சூரிய மின் சக்தி உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சித் திட்டங்களில் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் பட்டப் படிப்புகளை முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இது, ஒரு மாத கால படிப்பு ஆகும் (மொத்தம் 120 மணி நேரம்) என்றார்.

தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு வெளியிட்ட சூரிய மின்சக்தி கொள்கையில், சூரிய மின்சக்தி மூலம் 2015-ம் ஆண்டுக்குள் 3000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுடைய மின் தேவையில் 6 சதவீதத்தை சூரிய சக்தி மின் உற்பத்தி மூலம் பெற வேண்டும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தத் துறை வளர்ச்சி பெறுவதற்கு ஏற்ப தொழில்நுட்ப நிபுணர்கள் தேவையும் அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, ஃபோட்டோ வோல்டயிக் சோலார் எலெக்ட்ரிக் சிஸ்டம் மற்றும் சிறிய அளவிலான ஃபோட்டோ வோல்டயிக் சோலார் பொருள்கள் உற்பத்தி ஆகிய இரண்டு பயிற்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த பயிற்சிக்களுக்கான கட்டணம் ரூ.15,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பாட புத்தகங்கள் மற்றும் மதிய உணவு உள்ளிட்டவையும் அடங்கும்.

இந்தப் படிப்பில் விருப்பமுள்ளவர்கள், சென்னை கிண்டி ஐ.டி.ஐ. கட்டட வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மைய இணை இயக்குநரை தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

044 - 22501011, 8754590964 ஆகிய தொலைபேசி மற்றும் செல்பேசி எண்களில் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரனை தொடர்பு கொள்ளலாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"