பாலியல் கல்வியின் அவசியம் !!


வளர்த்து வரும் நாகரீக மோகம் என்பது இளைஞர்களிடையே பாலியல் மோகம் தொடர்பான தாக்கத்தை தூண்டுவதாகவே அமைந்துள்ளது. தற்போது நடைபெறும் குற்றங்களில் பெரும்பாலானவற்றிற்கு பாலியல் நோக்கம் சார்ந்த பின்னணிகளே அடிப்படை காரணமாக உள்ளது. பெண்ணை ஆண் ஒரு போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் நிலை இன்றையகாலகட்டத்தில் அதிகரித்து வருகிறது.

இதற்கு பாலியல் பற்றிய உண்மைகளை அவர்கள் அறியாமல் இருப்பதே காரணம். மேற்கத்திய நாடுகளை எடுத்துக்கொண்டால் பள்ளிக்கூடங்களிலேயே பாலியல் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம் பாலியல் பற்றிய உண்மைகளை தெரிந்து வைத்து இருக்கிறார்கள். குற்றச் செயல்களும் குறைவதுடன் அந்த நாடுகளில் மக்கள் தொகை கட்டுக்குள் இருக்கவும் பாலியல் கல்வி உதவுகிறது.

ஆணும் பெண்ணும் சமம் என்ற ஏற்றத்தாழ்வற்ற நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்தியாவில் பாலுணர்வு மற்றும் பாலியல் கல்வியைப் பற்றிய பேச்சு என்றாலே அதைக் கேட்கக்கூடாத அல்லது பேசக்கூடாத ஒன்று என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது. மறை பொருளாகக் கருதும் இதை வெகு சிலரே பேச முற்படுகிறார்கள்.

இக்கால இளைஞர்கள் மனதில் சினிமா, தொலைக்காட்சி வாயிலாக பாலுணர்வு பற்றிய ஆர்வம் தூண்டப்படுகிறது. ஆகையால் இதைப் பற்றிய விஞ்ஞான பூர்வமான விளக்கம் கொடுத்து, அவர்களின் ஐயப்பாட்டைப் போக்கி, அவர்கள் மனதில் உள்ள தவறான எண்ணத்தையும் நீக்குதல் அவசியமாகிறது.

விவரம் அறியாதவர்களை ஏமாற்றாமல் இருக்க இப்பாலியல் கல்வி வகை செய்யும். பல விஷயங்களையும் ஏன்ப எப்படிப எதனால் செய்ய வேண்டும் என்ற விவரம் கூறும் பெற்றோர், பாலியலைப் பற்றித் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லத் தயங்குகிறார்கள். இதற்குக் காரணம் பெற்றோர் இதைப் பற்றிய தெளிவான விவரம் அறியாததும், அல்லது வழி வழியாக வந்த நம்பிக்கையில் இவ்விஷயம் குழந்தைகளுக்குச் சொல்லத்தகாதது என இருத்தலும் காரணமாகும்.

சரி அப்படியானால் பாலியலைப்பற்றி அறிய இவர்கள் புத்தகத்தை நாடுவதாப அல்லது நண்பர்களையாப நண்பர்களுக்கு இவ்வறிவு இல்லை. பெற்றோர்கள் இதைப்பற்றி பேசுவதில்லை. இருக்கும் சில புத்தகங்கள் மருத்துவ நிபுணர்களால் எழுதப்படாததாகவோ அல்லது அறிவியற் பூர்வமாக இல்லாததாகவோ உள்ளது.

மருத்துவ நிபுணரால் எழுதப்பட்ட ஓரிரு புத்தகங்கள் சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாத கடினமான மருத்துவ மற்றும் ஆங்கில சொற்றொடர்களை உடையதாக இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு கற்பனையை, தவறான எண்ணத்தை உருவாக்கி, அறியாமை, பயம், தவறு, கவலை முதலிய வற்றிற்கு இட்டுச் செல்கிறது.

சமுதாயத்தின் அறியாமையும், அரைகுறை ஞானமும் அதிக அளவு பிரச்சனைகளை இளைஞர்களுக்கு உருவாக்குகின்றன. நேரடி கருத்துப்பரிமாற்றம்தான் இவர்களை பொறுப்புள்ள இளைஞராக்குகிறது. எது பொறுப்பான செயல்ப நாம் செய்யும் செயல்களின் விளைவை நம் மனத்திலேயே வைப்பது பொறுப்பானதாகுமா?

நாம் செய்யும் செயல்களின் விளைவே நமக்குத் தெரியாது போனால், நாம் எப்படிப் பொறுப்பாக இருக்க இயலும்ப பள்ளி செல்லாது போனால், அல்லது ஒரு திருட்டு போன்ற தவறான காரியத்தைச் செய்தால் அவற்றின் விளைவு தெரிந்த நமக்குப் பாலுணர்வு செயல்களினால் ஏற்படும் விளைவைப் பற்றியும் தெரிந்து இருத்தல் அவசியமான ஒன்று.

எவ்வாறு ஒருவன் சாப்பிட, நீந்த மற்றும் கார் ஓட்ட தெரிந்திருக்கிறானோ. அது போல், பால் கல்வியறிவு பெற்றிருத்தல் அவனை மகிழ்ச்சியாக வாழத்துணை புரிகின்றது. இது திருமண வாழ்வைச் சிறப்பிக்கிறது. ஒவ்வொரு இல்லறமும், அந்த இணையரின் உடல், மனம் சார்ந்த பொருத்தங்களை பொறுத்தே வெற்றி பெறுகின்றது.

ஒருவரின் பாலியல் குணாதிசயங்களை தெரிந்தும் புரிந்தும் இருப்பது இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு முக்கியமானது. உடற் கூறுகளின் கல்வியைப் பற்றி இனைஞர்களுக்குக் கற்பிப்பது அவசியம் என உணர வேண்டிய காலம் வந்து விட்டது. மனிதனின் இயற்கை உந்துதலை விஞ்ஞான பூர்வமாக அறிய, அதாவது பாலுணர்வைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இக்கல்வி மனித உடலியல் மற்றும் சுகாதாரக் கல்வியைப் போன்றதே. இது தான் அவர்களின் தவறான கருத்தை திருத்திக் கொள்ளவும், பாலியல் நடப்பு, தன்மை இவைகளைப் புரிந்து கொள்ளவும் சரியான வழியாகும். மக்கள் எப்போது நேர்மையாகவும், கூச்சமின்றியும் தங்கள் பாலியலை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்களோ அந்நிலையில்தான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல் என்பது அதிக பயனைத் தரும்.

எந்தெந்த நாடுகளிலெல்லாம், பாலியல் கல்வியை பற்றி மக்கள் தெளிவாக அறிந்து இருக்கிறார்களே அங்குதான் குடும்ப நல முறைகளை பின்பற்றுபவர்களது எண்ணிக்கையும் மிகுந்து காணப்படுகிறது. இதன் வாயிலாக நாமறிந்து கொள்வது என்னவென்றால், பாலியல் கல்வி என்பது மக்கள் தொகை கல்வியின் பிரிக்கமுடியாத, தவிர்க்க முடியாத ஓர் அங்கம் என்பதுதான்.

அதேபோல், பாலியல் கல்வியின்றி மக்கள் தொகை கல்வியும், மக்கள் தொகைக் குறைப்பும் உள்ளீடு இல்லாத வெற்றுப்பொருள் போன்றதுதான். குழந்தைப் பருவத்திற்கும், வளர்ந்த அல்லது பூப்படையும் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவத்தையே காளைப் பருவம் என்கிறோம். பருவமடைதலுடன்ஆரம்பித்து, பாலியல் குணாம்சங்கள் தெரிய ஆரம்பிக்கின்றன.

சராசரியாக ஒரு பெண்குழந்தை பருவமடைவதற்குச் சற்று முன் உடல் வளர்ச்சி மிக விரைவாக இருக்கிறது. மிக அதிக வளர்ச்சி 11 முதல் 14 வயது வரை பெண்களும், கிட்டத்தட்ட 14 வயதில் ஆண்களும் மிக விரைவாக உயரமாகிறார்கள். இப்பருவம் மிகக் கடுமையான சோதனைக் காலம்.

உடலுறவு உந்துதல், இருபாலருக்கும் ஏற்படுகிறது. இவை கவலையையும், மனக்கிலேசத்தையும் தூண்டி, தவறான பாதையில் போகும் வாய்ப்பு ஏற்படுகிறது. தாய், தந்தையர் மற்றும் ஆசிரியர் சொல்லை (அறிவுரைகளை) மீறிச் செயல்பட வழி வகுக்கிறது. இப்பருவத்தில் பகல் கனவு ஆரம்பமாகிறது. இதன் மூலம் இளைஞர்கள், முடியாத சில ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இளைஞர்கள் தங்கள் பெற்றோர். ஆசிரியர் மூத்த சகோதர சகோதரிகளை அணுகித் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும்போது இரு பக்கமும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டும். பருவமடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றம், இவர்களது மனமாற்றம், செயல் முதலியவற்றையும் மாற்றமடையச் செய்வதால், இவர்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபடவும் பலருடனும் தொடர்பற்று இருக்கவும் விரும்புவது உண்டு.

இந்த சமயத்தில் இயற்கையாக ஒருவரை நட்பு செய்யும் பழக்கம் இவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இளைஞர்கள் பள்ளி, கல்லூரி கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவற்றில் முழுமையாக ஈடுபட முயற்சிக்க வேண்டும்.

இப்பருவத்தில் காதல் கதைப் புத்தகங்கள் படிக்க இளைஞர்களிடத்தில் ஆர்வம் ஏற்படுவது இயற்கை. இம்மாதிரியான புத்தகங்கள் படிப்பதில் தவறில்லை என்றாலும் அதிகமாக இப்படி படிப்பதில் அன்றாடப் பணிகள் மற்றும் கடமைகளிலிருந்து தவறுவதற்கும், அவற்றை சரிவர செய்யாதிருக்கவுமே வழிவகுக்கும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"