ஜிமெயிலின் ஆப்லைன்பேக் அப் வசதி



இந்த வசதியினை மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் அவுட்லுக் போல தருவதற்கு கூகுள் முயற்சிகளை எடுத்துள்ளது. இணைய இணைப்பு இல்லாமலேயெ உங்கள் இமெயில்களை இதில் கையாளலாம். பிரவுசரில் இயங்கும் ஜிமெயில் போன்ற சூழ்நிலையில் இயங்கும் வகையில் இந்த வசதி தரப்படுகிறது.

ஆனால் இமெயில் கடிதங்களை மெதுவாகவும் பொறுமையாகவும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாமே. மேலும் ஜிமெயில் இந்த வசதியின் மூலம் உங்கள் இமெயில்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. எனவே எப்போதாவது ஜிமெயில் இன் பாக்ஸ் அளவிற்கு வரையறை அறிவிப்பு செய்தாலோ அல்லது ஜிமெயில் சர்வரே பிரச்சினை செய்தாலோ உங்கள் பழைய மெயில்கள் அனைத்தும் பத்திரமாக உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய அக்கவுண்ட்டினை பேக் அப் செய்திட முதலில் லேப்ஸ் சென்று அதற்கான செயல்பாட்டினை உணச்ஞடூஞு செய்திட வேண்டும். இதனை மேற்கொண்டவுடன் 'Offline 0.1' என ஒரு லிங்க் வலது மூலையில் கிடைக்கும்.

இதில் கிளிக் செய்தால் உங்கள் பிரவுசர் கூகுள் கியர்ஸ் (Google Gears) ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்திட உங்களுக்கு அறிவுறுத்தும். (இந்த தொகுப்பு தற்போதைக்கு ஆப்பரா பிரவுசரில் இயங்காது.) நீங்கள் குரோம் பிரவுசரைப் பயன்படுத்தினால் இந்த கூகுள் கியர்ஸ் இயல்பாகவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். மற்ற பிரவுசர் பயன்படுத்துபவர்கள் இன்ஸ்டால் பட்டனில் கிளிக் செய்திடலாம்.

இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் இதனை முழுமையாக இயங்க வைக்க கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடவும். இப்போது கியர்ஸ் செக்யூரிட்டி எச்சரிக்கை ஒன்று உங்களிடம் கேட்கப்படும். உங்கள் ஜிமெயில்களை கம்ப்யூட்டரில் பேக் அப் எடுத்து வைக்கவா? என்று கேட்கப்படும். இந்த செய்திக்குப் பக்கத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். உடன் டெஸ்க் டாப்பில் இதற்கான ஷார்ட் கட் ஏற்படுத்தப்படும். உங்கள் மெயில்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் காப்பி செய்யப்படும்.

பொதுவாக நாம் ஜிமெயிலில் வரும் இமெயில் செய்திகளை அழிப்பதே இல்லை என்பதால் பேக் அப் செய்திட சிறிது நேரமாகும். இருப்பினும் கூகுள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மெயில் செய்திகளை பேக் அப் எடுக்காது. அதே போல ஸ்பேம் மற்றும் ட்ரேஷ் பெட்டிகளில் உள்ள மெயில்களும் கம்ப்யூட்டருக்கு வராது.
இனி இந்த பேக் அப் மெயில்களைப் பயன்படுத்தி உங்கள் மெயில்களுக்கான பதில்களையும் இன்டர்நெட் இணைப்பு இல்லாத போதே நீங்கள் தயார் செய்திடலாம்.


இமெயில் கடிதங்களுக்குப் பதில் அளிக்கையில் நமக்கு வந்த மெயில் டெக்ஸ்ட் அனைத்தும் அதில் இணைக்கப்படுகிறது. இது பல வேளைகளில் தேவையற்ற இணைப்பாக அமைகிறது. ஏனென்றால் நம்முடைய பதில் நமக்கு வந்த மெயிலில் உள்ள ஓரிரு வரிகளுக்கு மட்டுமானதாக இருக்கும். அப்போது அந்த வரிகள் மட்டுமே இருந்தால் நன்றாக இருக்குமே என விரும்புவோம். ஆனால் முழு டெக்ஸ்ட்டும் தானாக இணைக்கப்படும். ஜிமெயிலில் நாம் விரும்பும் டெக்ஸ்ட்டை மட்டும் இணைக்கும் வசதி தரப்படுகிறது. Quote selected Text' என இது அழைக்கப்படுகிறது.

மேலே விளக்கியது போல கூகுள் Labs லிருந்து இதனையும் இன்ஸ்டால் செய்திடவும். பின் உங்களுக்கு வந்த இமெயில் டெக்ஸ்ட்டில் நீங்கள் இணைத்த டெக்ஸ்ட்டை மட்டும் தேர்ந்தெடுத்து பின் Reply பட்டனை கிளிக் செய்து பதில் கடிதம் தயாரிக்கத் தொடங்கினால் தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் மட்டுமே இருப்பதனைக் காணலாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"