மால்வேர் புரோகிராம்கள் பற்றிய விரிவான தகவல்கள்


கணனியையும் நம்மையும் பயமுறுத்தும் பாதுகாப்பு குறித்து நாம் Update செய்திடும் வகையில் இந்த தளம் செயல்படுகிறது. இது இணையச் செயல்பாட்டினை கண்காணிக்கும் ஒரு தளமாக இயங்குகிறது. இதில் கணனியை அவ்வப்போது அச்சுறுத்தும் மால்வேர்(Malwares) புரோகிராம்களைப் பற்றி விலாவாரியாகக் கூறுகிறது.

ஒவ்வொரு மோசமான மால்வேர்(Malware) புரோகிராமும் எப்போது வந்தது; எந்த அளவில் மோசமானது; அதனை எதிர்க்கும் பணியினை யார் யார் மேற்கொண்டுள்ளார்கள்; அதனைத் தவிர்க்க என்ன செய்திடலாம் என்பது போன்ற தகவல்களை சரியான புள்ளி விபரங்களுடன் தருகிறது. எனவே ஏதேனும் ஒரு மால்வேர்(Malware) குறித்து நீங்கள் சந்தேகப்பட்டு அது குறித்த தகவல்கள் வேண்டும் என்றால் உடனே இந்த தளத்தினை அணுகலாம். அந்த மால்வேர் புரோகிராமின் பெயரைக் குறிப்பிட்டு அது எங்கிருந்து வருகிறது என்ற தெளிவான தகவலைத் தருகிறது.

அத்துடன் குறிப்பிட்ட மால்வேர் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டருக்குள் நெருங்கவிடாமல் இருக்க அது வரும் ஐ.பி. முகவரியினைத்(IP address) தந்து அந்த முகவரியிலிருந்து எது வந்தாலும் அனுமதிக்காமல் செட் செய்திடும்படி கூறுகிறது. phishing மற்றும் வேறு வகைகளில் உங்கள் கணனிக்குள் வரும் புரோகிராம்களை அனுப்புவோரின் பொதுவான Domain பெயரையும் குறிப்பிடுகிறது.

இப்போது உலா வந்து கொண்டிருக்கும் மால்வேர் புரோகிராம்களைக் குறிப்பிட்டி இவற்றிற்கு எதிரான Antivirus மென்பொருட்களை யார் தயாரித்து வழங்குகிறார்கள் என்ற தகவலும் இங்கு கிடைக்கிறது. இதனை அறிந்து கொண்டு அத்தகைய தளங்களுக்குச் செல்லாமல் இருக்கலாம் இல்லையா!எனவே தங்கள் கணணி மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த தளம் அரிய தகவல்களைத் தரும் தளமாக உள்ளது. தடுக்கிறோமோ இல்லையோ கெடுதல் விளைவிப்பவர்கள் குறித்து அறிந்து கொள்வது நல்லதுதானே.

இணையதள முகவரி : http://mtc.sri.com/

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"